உள்ளடக்கத்திற்கு செல்ல

விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டுவதா? கேட்கிறார் ஸ்டாலின்
விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டுவதா? கேட்கிறார் ஸ்டாலின்
ADDED : ஜூன் 29, 2026 12:16 PM

அ நிறம் | அளவு
சென்னை: விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த திமுகவினர் கைது; தவெக ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வழக்கு.
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ரெய்டு; இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதல்வரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது.
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும். “டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
