100% எத்தனால் வாகனங்கள் அறிமுகம்: ஹீரோ, சுசூகி நிறுவனங்கள் தயார்
100% எத்தனால் வாகனங்கள் அறிமுகம்: ஹீரோ, சுசூகி நிறுவனங்கள் தயார்
ADDED : ஜூன் 01, 2026 04:38 AM

புதுடில்லி: பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்து, மாற்று எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், 100 சதவீத எத்த னால் எரிபொருளில் இயங் கும் வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் மாருதி சுசூகி நிறுவனங்கள் அறிமுகம் செய்ய உள்ளன.
ஹீரோ மோட்டோகார்ப் ஜூன் 3-ம் தேதி நாட்டின் முதல் 100 சதவீத எத்தனால் மோட்டார் சைக்கிளை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகப்படுத்துகிறது. தற்போது சந்தையில் உள்ள 'பிளெக்ஸ்- ப்யூயல்' வாகனங்கள் 85 சதவீத எத்தனால் கலவையில் இயங்கும் நிலையில், முழுமையாக எத்தனாலை மட்டுமே பயன்படுத்தும் முதல் இருசக்கர வாகனம் இதுவே ஆகும்.
ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகப்படுத்தும் எத்தனால் மோட்டார் சைக்கிள், 'எச்.எப். டீலக்ஸ்' மாடலை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுசூகி இம்மாதம் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று 100 சதவீத எத்தனால் எரிபொருளில் இயங்கும் நாட்டின் முதல் காரை மாருதி சுசூகி அறிமுகம் செய்ய உள்ளது.
இதன் வாயிலாக கார் சந்தையிலும் எத்தனால் எரிபொருள் பயன்பாடு புதிய கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசூகி அறிமுகப்படுத்த உள்ள 100 சதவீத எத்தனால் கார், வேகன்ஆர் அல்லது ப்ரான்க்ஸ் மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நாட்டில் ' இ- - 20' எனப்படும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டில் உள் ளது. ஆனால் புதிய வாகனங் கள் 'இ - -100' எனப்படும் 100 சதவீத எத்தனால் எரிபொருளில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள் ளன.
