தேர்தல் கமிஷனால் இடமாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு
தேர்தல் கமிஷனால் இடமாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு
ADDED : மார் 31, 2026 05:24 PM

சென்னை: தமிழகத்தில் தேர்தல் கமிஷன் உத்தரவின்படி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேருக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கூடுதல் தலைமைச்செயலர் தீரஜ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
கண்ணன் - சென்னை வெல்பேர் துணை கமிஷனர்
பாலகிருஷ்ணன் - சென்னை தலைமையிட துணை கமிஷனர்
ஜோஷ் தங்கையா - சென்னை பாதுகாப்பு துணை கமிஷனர்
சுஜாதா - தீவிரவாத எதிர்ப்பு பிரிவு எஸ்பி
சண்முகம் - க்யூ பிராஞ்ச் எஸ்பி
ராஜாராம் - விஜிலன்ஸ் தென்பிரிவு எஸ்பி
மாதவன் - சிபிசிஐடி மெட்ரோ எஸ்பி
அனிதா - உதவி ஐஜி/எஸ்பி, நவீனமயம், சென்னை நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தேர்தல் கமிஷனால் இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தனர்.
கண்ணன் விருதுநகர் எஸ்பி ஆகவும், பாலகிருஷ்ணன், நாகை எஸ்பி ஆகவும், ஜோஸ் தங்கையா கரூர் எஸ்பி ஆகவும் சுஜாதா ஈரோடு எஸ்பிஆகவும் பணியாற்றினர். அவர்கள் தேர்தல் கமிஷன் பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். தற்போது அவர்களுக்கு புதிய பணியிடங்கள ஒதுக்கப்பட்டுள்ளன.
