தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/குவைத் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்; இந்தியர் உயிரிழப்பு

குவைத் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்; இந்தியர் உயிரிழப்பு

குவைத் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்; இந்தியர் உயிரிழப்பு

2


UPDATED : ஜூன் 03, 2026 05:48 PM

ADDED : ஜூன் 03, 2026 04:49 PM

Follow on GoogleFavourite on Google

2

UPDATED : ஜூன் 03, 2026 05:48 PM ADDED : ஜூன் 03, 2026 04:49 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குவைத்: குவைத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் ஈரானில் உள்ள கெய்ஷ்ம் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலை முறியடிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அமெரிக்கா கூறியது.

இந் நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி இருக்கிறது.

இந்த தாககுதலில் குவைத் சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இதில் ஒருவர் பலியாகி உள்ளார். விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு கடுமையாக சேதம் அடைந்துள்ளது என குவைத் அறிவித்துள்ளது.

சேதம் அடைந்த பகுதிகளை விமான நிலையத்தின் தொழில்நுட்பக் குழுவினர் ஆராய்ந்தனர். அதன் பின்னர் விமான நிலையத்தின் 4வது முனையத்தில் இருந்து மட்டும் விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஈரானின் இந்த தாக்குதல் காரணமாக வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் நிலவி வருகிறது.

தூதரகம் அறிவிப்பு

குவைத் விமான நிலையம் மீதான தாக்குதலில் பலியானவர் இந்தியர் என்று குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ள தூதரகம், பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினருடன் அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர் என்றும் கூறி உள்ளது.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us