அமெரிக்க போர் விமானங்களை அழித்துவிட்டோம்: சொல்கிறது ஈரான்
அமெரிக்க போர் விமானங்களை அழித்துவிட்டோம்: சொல்கிறது ஈரான்
ADDED : ஜூலை 17, 2026 04:18 PM

டெஹ்ரான்: ஜோர்டானில் உள்ள அமெரிக்க போர் விமானங்களை ஏவுகணைகளை வீசி அழித்து விட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்குப் பகுதிகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளையும், டிரோன்களையும் வீசி வருகிறது. தங்கள் நாட்டை நோக்கி வந்த 3 ஏவுகணைகளை தாக்கி அழித்துவிட்டதாக ஜோர்டான் தெரிவித்து இருந்தது.
இதனிடையே, ஈரான் படைகள் வெளியிட்ட அறிக்கையில், '' அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அமெரிக்காவிற்கு சொந்தமான பல விமானங்கள் அழிக்கப்பட்டன. பல சேதம் அடைந்துள்ளன. எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். தங்கள் நாட்டில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் இஸ்லாம் விரோத அமெரிக்கர்களை ஜோர்டான் மக்கள் விரட்டியடிக்க வேண்டும்,'' எனத் தெரிவித்துள்ளது.
மேலும், சிரியாவில் உள்ள அமெரிக்கப் படை தளங்கள் மீதும் ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. ஈராக்கின் வட பகுதிகளிலும் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், ஈரான் அதனை உறுதி செய்யவில்லை.
