தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ வீரமணி வழக்கில் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை தேவை; இபிஎஸ் வலியுறுத்தல்

வீரமணி வழக்கில் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை தேவை; இபிஎஸ் வலியுறுத்தல்

வீரமணி வழக்கில் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை தேவை; இபிஎஸ் வலியுறுத்தல்

18


ADDED : செப் 24, 2026 03:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 03:50 PM

18


18
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வீரமணி வழக்கில் தொடர்புடைய யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை; ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக, பல சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது என்பது, ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.

இதுபோன்ற உணர்வுபூர்வமான, பல ஆண்டுகள் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த ஒரு விஷயம், தற்போது பொதுவெளியில் வந்திருக்கும் போது, போலீசார் இந்த வழக்கை எந்தவித அழுத்தமும் இன்றி கையாள வேண்டும். தற்போது, தொடர்ந்து பல்வேறு ஆதாரங்கள், சாட்சியங்கள் போலீசார் விசாரணையின் ஊடாக இந்த வழக்கில் சிக்கி உள்ளதாக செய்திகளில் வந்துள்ளன.

பெண்கள், சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றங்களை அதற்குரிய தன்மையோடு அணுக வேண்டும் என்பதை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அது எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும், இந்த சுதந்திர சமூகத்தில் எந்த ஒரு இடமும் அளிக்க கூடாது.

இந்த வழக்கில் யாருக்கு தொடர்பு இருந்தாலும், இதனை மறைக்க துணை நின்றது எவ்வளவு பெரிய அதிகாரமாக இருந்தாலும், அனைவர் மீதும் பாரபட்சம் இன்றி அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us