இஸ்ரேல் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்?
இஸ்ரேல் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்?
ADDED : செப் 07, 2026 04:24 AM

ஜெருசலேம்: தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகளை ஒருங்கிணைத்து, இஸ்ரேல் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்காசிய நாடான ஈரான், லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா, ஏமனில் உள்ள ஹவுதி, பாலஸ்தீனத்தின் ஹமாஸ், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரானிய ஆதரவு அமைப்புகள் ஆகியவற்றுடன், தன் படைகளையும் ஒருங்கிணைத்து இஸ்ரேல் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த உள்ளதாக, 'ஜெருசலேம் போஸ்ட்' நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டது.
ஈரானின் புரட்சிகர காவல் படை மற்றும் குத்ஸ் படையின் மூத்த அதிகாரிகள், ஹெஸ்பொல்லா மற்றும் பிற ஈரானிய ஆதரவு அமைப்புகளின் தலைவர்களுடன் தொடர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி இத்திட்டத்தை வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல்களால் சேதமடைந்த ராணுவ கட்டமைப்பை மீட்டெடுக்க ஈரான் முயன்று வருவதுடன், தன் ஆதரவு அமைப்புகளுடன் சேர்ந்து கூட்டு பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
