தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தி.மு.க., அணியில் இருந்து மா.கம்யூ., வெளியேறுகிறதா?

தி.மு.க., அணியில் இருந்து மா.கம்யூ., வெளியேறுகிறதா?

தி.மு.க., அணியில் இருந்து மா.கம்யூ., வெளியேறுகிறதா?


ADDED : மார் 19, 2026 10:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 10:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை : தி.மு.க., கூட்டணியில், ஆறு தொகுதிகளுக்கு குறைவாக தருவதை ஏற்பதா அல்லது கூட்டணியை விட்டு வெளியேறுவதா என்பது குறித்து, வரும் 23ம் தேதி, மா.கம்யூ., மாநிலக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட மா.கம்யூ., இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. இந்த சட்டசபை தேர்தலில், கூட்டணியில் அக்கட்சிக்கு ஐந்து தொகுதிகளை மட்டுமே ஒதுக்க தி.மு.க., முடிவு செய்துள்ளது. ஆனால், கடந்த முறை போலவே ஆறு தொகுதிகள் தந்தால் தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறி விட்டது.

இந்நிலையில், அக்கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம், வரும் 23ம் தேதி சென்னையில் நடக்கிறது. அதில், ஐந்து தொகுதிகளை ஏற்று தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா அல்லது நடிகர் விஜயின் த.வெ.க.,வுடன் கூட்டணிக்கு செல்லலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us