sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நீதிமன்றத்தை விட போலீஸ் கமிஷனர் பெரியவரா? அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி

/

நீதிமன்றத்தை விட போலீஸ் கமிஷனர் பெரியவரா? அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி

நீதிமன்றத்தை விட போலீஸ் கமிஷனர் பெரியவரா? அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி

நீதிமன்றத்தை விட போலீஸ் கமிஷனர் பெரியவரா? அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி


ADDED : டிச 05, 2025 07:21 AM

Google News

ADDED : டிச 05, 2025 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திருப்பரங்குன்றம் தீப துாணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான அவமதிப்பு வழக்கில், 'நீதிமன்றத்தை விட போலீஸ் கமிஷனர் பெரியவரா?' என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், அரசு தரப்பை கடுமையாக சாடியது.

மதுரை மாவட்டம், ஹிந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம ரவிகுமார் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் டிச., 1ல் பிறப்பித்த உத்தரவு: வழக்கமான இடங்களையும் சேர்த்து தீப துாணிலும் கார்த்திகை தீபத்தை கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். அதை உறுதி செய்வது சம்மந்தப்பட்ட போலீசாரின் கடமை. இந்த உத்தரவில் யாரும் தலையிடாமல் இருப்பதை போலீஸ் கமிஷனர் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை நிறைவேற்றாததால், ராம ரவிகுமார் நேற்று முன்தினம் மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'தீபத் துாணில் தீபம் ஏற்ற கோவில் செயல் அலுவலருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அதை நிறைவேற்ற மாட்டோம் என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

'எனவே, தீபத்துாணில் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அவர், 10 பேரை அழைத்து செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அனுப்ப உயர் நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன்' என, உத்தரவிட்டார். நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு, 'தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதில் அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது' என்றது.

நீதிபதி, 'நீங்கள் இந்த உத்தரவால் பாதிக்கப்படவில்லை; ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்' என்றார். அரசு தரப்பு, 'கோவில், தர்கா தரப்புக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புங்கள். உணர்வுப்பூர்வமான வழக்கு என்பதால் நான்கு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும். மேல்முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டும். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம்' என்றது.

நீதிபதி, 'கோவில் தரப்பு வழக்கறிஞரும் கண்ணியமாக நடந்திருக்கலாம். உடல்மொழியிலேயே எங்களுக்கு எல்லாம் தெரியும். செயல் அலுவலரை ஆஜராக கூறியதற்கு, 'எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை' என அலட்சியமாக பதிலளித்தார்' என்றார்.

அரசு தரப்பு, 'அதுபற்றி எனக்கு தெரியாது. அவருக்காக வருந்துகிறேன். உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால் தயவுசெய்து கருத்தில் கொண்டு வழக்கை ஒத்திவைக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்றது.

நீதிபதி, 'நீங்கள் என்ன செய்வீர்கள்?' என, கேள்வி எழுப்பினார். அரசு தரப்பு, 'உங்கள் உத்தரவை பார்த்து, அடுத்த கட்டம் செல்வோம்' என்றது. நீதிபதி, 'கோவில் செயல் அலுவலர் உடனடியாக காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும். நீதிமன்றத்தின் மதிப்பு அவருக்கு புரிய வேண்டும். செயல் அலுவலர் வருவாரா; இல்லையா? போலீஸ் கமிஷனரும், கலெக்டரும் காணொளி வாயிலாக உடனடியாக ஆஜராக வேண்டும். சீருடையில் இல்லையென்றாலும் பரவாயில்லை' என்றார்.

அரசு தரப்பு, 'அதிகாரிகளை 5 நிமிடங்களில் ஆஜராக வேண்டுமென கூறினால் எப்படி?' என, கேள்வி எழுப்பியது.

நீதிபதி, 'செயல் அலுவலரின் நடவடிக்கையே, அவரை ஆஜராக உத்தரவிட காரணம். மாலை 5:30 மணிக்கு கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் காணொளி வாயிலாக ஆஜராகவில்லை என்றால் கடுமையான உத்தரவு பிறப்பிக்க தயங்க மாட்டேன்' என குறிப்பிட்டு, மாலை 5:20 மணிக்கு இருக்கையில் இருந்து கீழிறங்கினார்.

இதையடுத்து, மாலை, 5:30 மணிக்கு போலீஸ் கமிஷனர் லோகநாதன் காணொளி வாயிலாக ஆஜரானார்.

நீதிபதி, 'நீதிமன்ற உத்தரவு தங்களுக்கு அளிக்கப்பட்டதா? அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தீர்களா?' என, கமிஷனரிடம் கேள்வி எழுப்பினார். கமிஷனர், 'மதியம் 3:30 மணி முதலே மக்கள் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் அதிகம் பேர் கூடினர். மாலை, 5:30 மணிக்கு கூட்டம் அதிகமானது. இதனால் பேரிகார்டுகளை அமைத்து கட்டுப்படுத்த முயன்றோம்.

பேரிகார்டுகள் தகர்க்கப்பட்டு, போலீசாருக்கு காயங்கள் ஏற்பட்டன. சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சூழல் குறித்து கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்' என்றார்.

நீதிபதி, ' எந்த நேரத்தில் கலெக்டருக்கு பரிந்துரை அனுப்பினீர்கள்?' என கேள்வி எழுப்ப, கமிஷனர், 'மாலை 5:45 மணியளவில் அனுப்பியிருப்போம்' என, பதிலளித்தார். நீதிபதி, 'எப்போது உங்களுக்கு உத்தரவு கிடைத்தது?' என, கேள்வி எழுப்ப, கமிஷனர், 'மாலை, 6:15 மணிக்கு உத்தரவு விபரங்கள் கிடைத்தன' என, பதிலளித்தார்.

அரசு தரப்பு, 'அந்த பரிந்துரை அடிப்படையில் மாலை, 6:10 மணிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை எனில், நீதிமன்ற அவமதிப்பு எடுக்கப்படும் என்பதாலேயே, அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. எங்கள் நோக்கம் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக்கூடாது; மதிக்கக் கூடாது என்பதல் ல.

'மறுநாள் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால், சூழலை நிர்வகிக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எது எப்படியாயினும், போலீஸ் கமிஷனரை பாராட்ட வேண்டும். பெரிய காயங்கள், இழ ப்புகளின்றி சூழலை நிர்வகித்தார்' என்றது.

நீதிபதி, 'பெரியளவில் பிரச்னை எழாதது மக்களின் நன்னடத்தையால் தான். அந்த நன்மதிப்பை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம்' என, தெரிவித்து, தொடர்ந்து பிறப்பித்த உத்தரவு: தீப துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக டிச., 1ல் உத்தரவிடப்பட்டது. அது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில் மனுதாரர் தீபமேற்ற உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, மனுதாரர் சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்புடன் மேலே செல்ல முயன்ற போது, போலீஸ் கமிஷனர் தடுத்துள்ளார். 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், மேலே செல்ல அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அதாவது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற இயலாது என, கூறியுள்ளார். இதனால், சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் திரும்பி விட்டனர். மனுதாரரால் தீபத்தை ஏற்ற முடியவில்லை. இன்று அந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து தள்ளுபடி செய்து, விரிவான உத்தர வை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், கலெக்டர் 144 தடை உத்தரவு பிறப்பித்தது குறித்து குறிப்பிட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் போதுமான பாதுகாப்பு வழங்கியிருந்தால், பிரச்னை பெரிதாகியிருக்காது. அவரோ கலெக்டர், நீதிமன்றத்தை விட தானே பெரியவர் என எண்ணியுள்ளார். அதனால், கலெக்டர் பிறப்பித்த உத்தரவால், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த இயலவில்லை என, விளக்கம் அளித்துள்ளார்.

எனவே, கலெக்டர் பிறப்பித்த 144 தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இன்றும்(நேற்று) கார்த்திகை தீபம் ஏற்றலாம். ஆகையால், மனுதாரர் தீப துாணில் தீபம் ஏற்ற கமிஷனர் லோகநாதன் தலைமையிலான போலீசார் முழு பாது காப்பு வழங்க வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்து நாளை, காலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us