தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இதுதான் தூய்மையா? தவறான பாதையில் தவெக: வருத்தம் அளிக்கிறது என்கிறார் இபிஎஸ்

இதுதான் தூய்மையா? தவறான பாதையில் தவெக: வருத்தம் அளிக்கிறது என்கிறார் இபிஎஸ்

இதுதான் தூய்மையா? தவறான பாதையில் தவெக: வருத்தம் அளிக்கிறது என்கிறார் இபிஎஸ்


UPDATED : மே 13, 2026 05:25 PM

ADDED : மே 13, 2026 01:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2026 05:25 PM ADDED : மே 13, 2026 01:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: இதுதான் தூய்மையா? தவறான பாதையில் இந்த அரசு செல்வது வருத்தமாக உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.

சென்னையில் சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் இபிஎஸ் கூறியதாவது: முதல்வர் தூய்மையான ஆட்சி நடத்துவேன் என்று சொல்கிறார். தூய்மையான ஆட்சி நடத்துவேன் என்று சொன்னால், எல்லா இடத்திலும் தூய்மையாக இருக்க வேண்டும். ஒரு கட்சியில் கருத்து வேறுபாடு நடக்கிறது. அந்த கருத்து வேறுபாடுகளை மையமாக வைத்து ஒரு சார்பினர் வீட்டிற்கு சென்று வருவது எந்த விதத்தில் நியாயம். இதுதான் தூய்மையா?

எல்லா கட்சிக்கும் சோதனை வரும். இது தவறான முன் உதாரணம். இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத ஒன்று. இன்றைக்கு எத்தனையோ கட்சிகள் ஆட்சியில் இருந்து இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறது. ஆனால் எந்த தலைவரும் பிரிந்த இயக்கத்தினரை சேர்ந்தவரின் வீட்டிற்கு சென்றது கிடையாது, ஆனால் ஆரம்பத்திலேயே தவறான பாதையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் சென்று கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.

தவெகவை எதிர்த்து ஓட்டளிக்க வேண்டும் என்று முழுமையான தகவல் கொடுக்கப்பட்ட பிறகும் ஆதரவாக ஓட்டளித்துள்ளனர். குதிரை பேரம் நடந்து கொண்டு இருப்பதாக பேசப்படுகிறது. உண்மையில் தூய்மையான ஆட்சி நடத்துவோம் என்று சொல்லிவிட்டு இதற்கு எல்லாம் இடம் அளிக்கிறார்கள் என்று பார்க்கும் போது மக்கள் தான் இதற்கு நல்ல முடிவை கட்ட வேண்டும். இன்றைக்கு தவெக 108 இடங்களில் தான் வெற்றி பெற்று இருக்கிறது. அதில் ஒரு இடத்தை ராஜினாமா செய்ததால் 107 இடங்கள் தான். ஒருவர் பங்கேற்க நீதிமன்ற தடை விதித்துள்ளது.

தவெகவின் இடம் 106 தான்; இன்றைக்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் வெற்றி பெற்று, தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் தான் அந்த 118 இடங்களுக்கு மேல் கிடைத்து ஆட்சி அமைத்து இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன நடை முறைகளை தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் பின்பற்றவில்லை என்பது தான் எதார்த்தமான உண்மை. தமிழகத்தில் இன்றைக்கு அவர்கள் 34 சதவீத ஓட்டுக்கள் தான் பெற்று இருக்கிறார்கள். 66 சதவீதம் பேர் இன்னும் தமிழக வெற்றிக்கழத்தின் மீது வெறுப்பாக தான் இருக்கிறார்கள்.

அதிமுக கூட்டணி 1 கோடியே 34 லட்சம் ஓட்டுக்கள் பெற்று இருக்கிறது. அதிமுக வலிமையான இயக்கம். அதிமுக கூட்டணி கட்சியினரை தவிர திமுகவுடன் 100க்கு 100% பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அமைச்சர் பதவி கொடுப்பதாக ஆசை வார்த்தைக் கூறி தவெக பேரம் நடத்தி உள்ளது. 6 அமைச்சர், வாரிய தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு தவெக அரசுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் ஆதரவு அளித்துள்ளனர். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

இபிஎஸ் மீது குற்றச்சாட்டு

இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம், ''மே 4ம் தேதி தேர்தல் முடிவு வெளியான மாலை திமுகவில் இருந்து இரு முன்னாள் அமைச்சர்கள் என்னை தொடர்பு கொண்டனர். நல்ல பதவிகளை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினர்.

எனக்குப்புரியவில்லை. பின்னர் தான், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க இபிஎஸ் முயற்சி எடுத்தது தெரியவந்தது. அடுத்த 2 நாட்களில் திருமாவளவனை முதல்வராக்கவும், அதிமுகவில் மற்ற அமைச்சர் பதவிகளை வைத்துக் கொள்ளவும் இன்னொரு முயற்சி நடந்தது. இதை ஏற்க இபிஎஸ் மறுத்து விட்டார். நான் தான் முதல்வராக இருப்பேன் என்று கூறி அதை தடுத்து விட்டார்,'' என்றார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

தவறான பாதையில் விஜய்; இபிஎஸ் பரபரப்பு பேட்டி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us