இது தான் பெண்கள் மீது நீங்கள் வைத்துள்ள மரியாதையா? திமுகவினரை விளாசிய அமைச்சர் ரமேஷ்
இது தான் பெண்கள் மீது நீங்கள் வைத்துள்ள மரியாதையா? திமுகவினரை விளாசிய அமைச்சர் ரமேஷ்
ADDED : ஆக 24, 2026 02:11 PM

திருச்சி: இது தான் பெண்கள் மீது நீங்கள் வைத்துள்ள மரியாதையா? என திமுகவினரை அமைச்சர் ரமேஷ் கடுமையாக சாடியுள்ளார்.
திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ரமேஷ் பேசியதாவது: நாம் இன்னும் தைரியமாக களத்தில் வேலை செய்ய வேண்டும். திமுக எம்எல்ஏ ஒரு கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரை உட்கார வைத்து கொண்டு ஒரு பெண் அமைச்சரை கீழ்த்தரமாக பேசுகிறார், அதை உதயநிதி மேடையில் இருந்தே ரசித்து சிரித்து கொண்டிருக்கிறார்.
சிந்தித்து பாருங்கள். இவர்கள் பெண்கள் மீது வைத்து இருக்கும் மரியாதை என்ன? மதிப்பு என்ன? இது தான் பெண்கள் மீது நீங்கள் வைத்துள்ள மரியாதையா? அவ்வளவு கீழ்த்தரமாக மேடையில் பேசி கொண்டு இருக்கிறீர்கள். அப்படி நாங்கள் என்ன பண்ணிவிட்டோம்.
நேர்மையாக வேலை செய்வது தவறா; உண்மையாக இருப்பது தவறா; மக்களோடு மக்களாக நிற்பது தவறா; ஏதுக்கு உங்களுக்கு இந்த கோபம் வருகிறது. அதிகாரத்தில் இல்லை என்றால் உங்களால் இருக்க முடியாதா? மக்கள் தீர்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். அதை மதிக்க வேண்டியது தானே; நாங்கள் தான் அதிகாரத்தில் இருக்க வேண்டும். நாங்கள் தான் ஆள வேண்டும்; மக்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்றால் அது என்ன மனநிலை?
அந்த மனநிலை இருக்கிறது என்பதால் ஒரு பெண் அமைச்சரை இப்படி பேசி கொண்டு இருக்கிறீர்கள். ஒரு பெண் வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டு பெண் அமைச்சரை தவறாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பெண்களுக்கு ஆடை சுதந்திரம் கிடையாதா? நீங்கள் கடமையை செய்யாமல் தான் ஆட்சியில் இல்லாமல் வீட்டில் இருக்கிறீர்கள். இப்பொழுதும் கண்ணியம், கட்டுப்பாடு இல்லாமல் தான் பேசி கொண்டு இருக்கிறீர்கள். அமைச்சர் ரமேஷ் பேசினார்.
