இஸ்ரேல் - ஹிஸ்புல்லா அமைப்பு இடையே போர்நிறுத்தம் கையெழுத்து ; அமெரிக்கா அறிவிப்பு
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா அமைப்பு இடையே போர்நிறுத்தம் கையெழுத்து ; அமெரிக்கா அறிவிப்பு
ADDED : ஜூன் 19, 2026 07:43 PM

ஜெருசலேம் : அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தம் கையெழுத்தான நிலையில், இஸ்ரேல் - ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே போர் நிறுத்தம் கையெழுத்தாகியுள்ளதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்காசிய போரை முடிவுக்குக் கொண்டு வர கடந்த 17ம் தேதி அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே ஓர் இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தானது. லெபனான் உட்பட அனைத்து பிராந்தியங்களிலும் ராணுவ நடவடிக்கைகளை நிரந்தரமாக நிறுத்த இந்த ஒப்பந்தம் வலியுறுத்தியது.
இருப்பினும், இஸ்ரேலும் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினரும் இடையே பரஸ்பர தாக்குதல் நடத்தினர். இது, அமெரிக்கா, ஈரான் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது.
மேற்காசியாவில் போர் பதற்றத்தை தவிர்க்கும் விதமாக, ஒரு விரிவான போர் நிறுத்தத்தை அமல்படுத்தாமல் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையைத் தொடர முடியாது என்று ஈரான் ஹிஸ்புல்லாவிடம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இஸ்ரேலும், ஈரான் ஹிஸ்புல்லா அமைப்பும் இன்று மாலை 4 மணி முதல் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் கத்தார் நாட்டின் மத்தியஸ்தகர்கள், ஈரானின் உதவியுடன் இந்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாகக் அவர் குறிப்பிட்டார்.
