பிளை துபாய் விமானத்தை சுட்டு வீழ்த்த தயாரான இஸ்ரேல்!
பிளை துபாய் விமானத்தை சுட்டு வீழ்த்த தயாரான இஸ்ரேல்!
UPDATED : அக் 07, 2026 07:45 AM
ADDED : அக் 06, 2026 10:44 PM

- நமது சிறப்பு நிருபர்-
செப்டம்பர் 30ல் துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி சென்ற பிளை துபாய் விமானத்தை கடத்த ஓமன் துணை விமானி அல் ஹம்மாமி சதி திட்டம் தீட்டினார்.இதற்காக அங்கிருந்த கோடாரியால், விமானி ஸ்மிட் மச்சாரை கடுமையாக தாக்கினார். விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்பை சேதப்படுத்தினார். இதனால் விமானம் திடீரென 16 ஆயிரம் அடி உயரத்தை இழந்தது.
ஆனால், ஸ்மிட் மச்சார் காயத்தை பொருட்படுத்தாமல் மன உறுதியுடன் முன்னேறி, காக்பிட் கதவை திறந்தார். இதனால், பயணிகள் உள்ளே வந்து அல் ஹம்மாமியை பிடித்து விமானத்தை கட்டுப்படுத்தினர். சவுதி அரேபியாவில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
துணை விமானி தாக்கியதும், அவசர கால எச்சரிக்கைக்கான சிக்னலை ஸ்மிட் மச்சார் அனுப்பினார். விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இஸ்ரேல் விமானப்படைக்கு கிடைத்தது. அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை போல தாக்குதல் நடத்தலாம் என சந்தேகித்தனர்.
இதனையடுத்து விமானம் டெல் அவிவ் அல்லது பென் குரியன் நகரை நோக்கி முன்னேறி இருந்தால் அதனை சுட்டு வீழ்த்த விமானப்படை தயாராக இருந்தது. ஆனால், விமானம் இஸ்ரேலுக்குள் நுழையாமல், சவுதி அரேபியாவிற்கு திரும்பியதால் இஸ்ரேல் தனது திட்டத்தை கைவிட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
