தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/பிளைதுபாய் விமானத்தை சுட்டு வீழ்த்த தயாரான இஸ்ரேல்! வெளியான அதிர்ச்சி தகவல்

பிளைதுபாய் விமானத்தை சுட்டு வீழ்த்த தயாரான இஸ்ரேல்! வெளியான அதிர்ச்சி தகவல்

பிளைதுபாய் விமானத்தை சுட்டு வீழ்த்த தயாரான இஸ்ரேல்! வெளியான அதிர்ச்சி தகவல்

6


UPDATED : அக் 07, 2026 12:54 AM

ADDED : அக் 07, 2026 12:52 AM

Follow on GoogleFavourite on Google

6

UPDATED : அக் 07, 2026 12:54 AM ADDED : அக் 07, 2026 12:52 AM


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது சிறப்பு நிருபர் -

பிளைதுபாய் விமானத்தை கடத்தும் முயற்சியின் போது, தங்கள் எல்லைக்குள் வந்தால், விமானத்தை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் தயார் நிலையில் இருந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து மற்றொரு மேற்காசிய நாடான இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற பிளைதுபாய் விமானத்தை கடத்தும் முயற்சி சமீபத்தில் நடந்தது. ஓமனைச் சேர்ந்த துணை விமானி ஹமால் அல் ஹமாமியின் இந்த முயற்சியை தடுக்க முயன்ற, நம் நாட்டைச் சேர்ந்த விமானி கேப்டன் ஸ்மிட் மச்சார் கடுமையாக தாக்கப்பட்டார்.

அவசரகால பயன்பாட்டுக்காக விமானத்தில் வைத்திருக்கும் கோடாரியால், தலை, கை, கால்கள், நெஞ்சு மற்றும் மேல் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் மச்சார் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தின போது, விமானத்தை கடத்த முயற்சி நடப்பதாக அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிளைதுபாய் விமானம் தங்கள் எல்லைக்குள் வந்தால், அதை சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேல் தயாராக இருந்ததாக கூறப்படுகிறது.

பேராபத்து தவிர்ப்பு:

அந்த விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் இஸ்ரேலைச் சேர்ந்தவர்களே. இருப்பினும், கட்டடங்கள் மீது மோத வைத்தால் அதிக உயிர் பலி ஏற்படும் அபாயம் இருந்தது. இதையடுத்து, சுட்டு வீழ்த்துவதற்காக இஸ்ரேல் ராணுவம் தயாராக இருந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக விமானம் இஸ்ரேல் வான்வெளிக்குள் செல்லாமல், சவுதி அரேபியாவை நோக்கி திசையை மாற்றியதால் பேராபத்து தவிர்க்கப்பட்டது.

Image 1627249

ஸ்மிட் மச்சாரின் மண்டை ஓட்டில் எலும்புமுறிவு


பிளைதுபாய் விமான சம்பவத்தில் கடுமையாக தாக்கப்பட்ட இந்திய விமானி ஸ்மிட் மச்சாரின் மண்டை ஓட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், நரம்புகள் பாதிப்பால் கண்பார்வையை இழக்கும் நிலையில் அவர் இருந்ததாகவும் சவுதி அரேபிய மருத்துவமனை தற்போது தகவல்களை வெளியிட்டுள்ளது. அவசரமாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளைத் தொடர்ந்து, அவர் உயிர் பிழைத்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us