திமுகவை பயன்படுத்தி விட்டு துாக்கி எறிந்து விட்டது: பா.ஜ., சாடல்
திமுகவை பயன்படுத்தி விட்டு துாக்கி எறிந்து விட்டது: பா.ஜ., சாடல்
ADDED : மே 06, 2026 08:12 PM

சென்னை; தி.மு.க., கூட்டணியில் இருந்து, திடீரென தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரசுக்கு, பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா பேட்டி:மாநிலங்களில் கூட்டணி கட்சிகளை பயன்படுத்தி விட்டு, காங்கிரஸ் துாக்கி எறிகிறது. 'இண்டி' கூட்டணி என்பது ஒரு லட்சியம், தொலைநோக்கு பார்வையின் கூட்டணி அல்ல. மாறாக, அது குழப்பம், பிரிவினைவாதம், ஊழல், பதவிக்கான பேராசை, பிரதமர் மோடிக்கு எதிரான வெறி ஆகியவற்றின் கூட்டணி. அதனால் தான் அவர்கள் ஒன்று சேர்ந்தனர்.
இந்த கூட்டணி, நாடு முழுதும் எங்கே இருக்கிறது; எங்கேயாவது, 'இண்டி' கூட்டணியை பார்க்க முடிகிறதா? தி.மு.க.,வை பயன்படுத்திவிட்டு, காங்கிரஸ் துாக்கி எறிந்து விட்டது. காங்கிரஸ் எப்போதும் இப்படி தான் நடந்து கொள்ளும்.
பிரதமர் மோடி கூறியதுபோல், காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி போன்றது. அது, ஓட்டு வங்கிக்காக மாநில கட்சிகளை பயன்படுத்துகிறது. ஒருமுறை ஓட்டு வங்கியை பெற்று விட்டால், அடுத்த கட்சிக்கு நகர்ந்து விடுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
