sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'இண்டி' கூட்டணி மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அதிருப்தி!: பா.ஜ.,வுடன் கைகோர்ப்பது தொடர்பாக ஆலோசனை

/

'இண்டி' கூட்டணி மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அதிருப்தி!: பா.ஜ.,வுடன் கைகோர்ப்பது தொடர்பாக ஆலோசனை

'இண்டி' கூட்டணி மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அதிருப்தி!: பா.ஜ.,வுடன் கைகோர்ப்பது தொடர்பாக ஆலோசனை

'இண்டி' கூட்டணி மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அதிருப்தி!: பா.ஜ.,வுடன் கைகோர்ப்பது தொடர்பாக ஆலோசனை


UPDATED : டிச 07, 2025 01:04 AM

ADDED : டிச 07, 2025 12:56 AM

Google News

UPDATED : டிச 07, 2025 01:04 AM ADDED : டிச 07, 2025 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜார்க்கண்டில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 'இண்டி' கூட்டணி மீது அதிருப்தியில் இருக்கும் முதல்வர் ஹேமந்த் சோரன், பா.ஜ.,வுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், எப்போது வேண்டுமானாலும் கூட்டணி கணக்கு மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநில அமைச்சரவையில் இரு கட்சிகளின் தலைவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

தேசிய அளவில், எதிர்க்கட்சிகளின், 'இண்டி' கூட்டணியிலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அங்கம் வகிக் கிறது.

முற்றுப்புள்ளி


இந்நிலையில், 'இண்டி' கூட்டணியில் இருந்து விலக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முடிவு செய்துள்ளதாகக் கூறப் படுகிறது.

முதல்வர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா ஆகியோர், சமீபத்தில் டில்லியில், பா.ஜ., மேலிடத் தலைவர்களை சந்தித்து பேசியதாகக் கூறப்படும் நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.

ஜார்க்கண்ட் கவர்னர் சந்தோஷ் கங்க்வாரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது.

இதற்கிடையே, 'ஜார்க்கண்டில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி உறுதியாக உள்ளது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்' என, அறிக்கை வெளியிட்டு ஊகங்களுக்கு காங்., முற்றுப்புள்ளி வைத்தது.

அக்கட்சியின் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், “முதல்வர் ஹேமந்த் சோரனுடன் பேசினேன். ஜார்க்கண்டில், 'இண்டி' வலுவாக உள்ளது. மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம்,” என்றார்.

எனினும், இண்டி கூட்டணி மீது முதல்வர் ஹேமந்த் சோரன் அதிருப்தி அடைய மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் நடந்த பீஹார் ச ட்டசபை தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., அடங்கிய, 'மஹாகட்பந்தன்' கூட்டணி, ஒரு தொகுதியை கூட தரவில்லை. இ தனால் கடுப்பான ஹேமந்த் சோரன், தேர்தலை பு றக் கணிப்பதாக அறிவித்தார்.

ஜார்க் கண்டில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மைக்கு, 41 இடங்கள் தேவை. 34 எம்.எல்.ஏ.,க்கள் வைத்துள்ள ஜா ர்க்கண்ட் முக்தி மோர்சா, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தாலும் ஆட்சி அமைக்க முடியும்.

ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜார்க்கண்ட் அரசு, மக்கள்நலத் திட்டங் களுக்கு மட்டும் ஆண்டுதோறும், 13,363 கோடி ரூபாய் செலவிடுகிறது.

நிதி நெருக்கடி


மத் திய அரசின் நிதியுதவி கிடைத்தால் மட்டுமே இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும். இதனால், பா.ஜ., கூட்டணியில் இணைவது தொடர்பாக, முதல்வர் ஹேமந்த் சோரன் ஆலோசித்து வருவதாகவும் கூறப் படுகிறது.

மேலும், நாடு முழுதும் காங்கிரசின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில், அக்கட்சியை நம்பி இனி பயனில்லை என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஜார்க்கண்ட் காங்., மூத்த த லைவர் பந்து திர்க்கி கூறுகையில், “நிதி நெருக்கடி அளித்து ஜார்க்கண்ட் அரசை அடிபணிய வைக்க மத்திய பா.ஜ., அரசு முயல்கிறது. எங்களுக்கு கிடைக்க வேண்டிய 1.36 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்க வில்லை,” என்றார்.

அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், 'பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தால் மத்திய அரசின் நிதி, பிற நிவாரணங்கள் எளிதில் கிடைக்கும்; தேர்தல் வாக்குறுதி களையும் நிறைவேற்ற முடியும்.

'இது தவிர அமலாக்கத் துறை வழக்குகளில் இருந்தும் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு பாதுகாப்பு கிடைக்கும்' என்றனர்.

இதற்கிடையே, முதல்வர் ஹே மந்த் சோரனின் தந்தையும், முன்னாள் முதல்வருமான மறைந்த ஷிபு சோரனுக்கு, நாட்டின் உயரிய விருதான, 'பாரத ரத்னா'வை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கூட்டணி கணக்குகளை வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், ஜார்க்கண்டில் எப்போது வேண்டு மானாலும் கூட்டணி கணக்கு மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது சிறப்பு நிருபர் -:






      Dinamalar
      Follow us