தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ஜோனாதன் டேவிட் 'ஹாட்ரிக்'; கத்தாரை வீழ்த்தி கனடா சாதனை வெற்றி!

ஜோனாதன் டேவிட் 'ஹாட்ரிக்'; கத்தாரை வீழ்த்தி கனடா சாதனை வெற்றி!

ஜோனாதன் டேவிட் 'ஹாட்ரிக்'; கத்தாரை வீழ்த்தி கனடா சாதனை வெற்றி!

3


UPDATED : ஜூன் 19, 2026 01:09 PM

ADDED : ஜூன் 19, 2026 07:57 AM

Follow on GoogleFavourite on Google

3

UPDATED : ஜூன் 19, 2026 01:09 PM ADDED : ஜூன் 19, 2026 07:57 AM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

​வான்கூவர்: உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில் 'பி' பிரிவில் நடந்த லீக் போட்டியில், கத்தார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்து, உலகக்கோப்பை வரலாற்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துதது கனடா. அந்த அணியின் ஜோனாதன் டேவிட் 'ஹாட்ரிக்' கோல் அடித்து மிரட்டினார்.

​போட்டி தொடங்கியது முதலே கனடா வீரர்கள் மைதானத்தில் 'மின்னல்' வேக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே கத்தார் அணியின் தற்காப்பு அரணை, கனடா வீரர்கள் எளிதாக கடந்து முன்னேறினர்.

16வது நிமிடத்தில், கனடாவின் சைல் லாரின் தனது அணிக்காக முதல் கோல் அடித்தார். கனடா அணியின் நட்சத்திர வீரர் ஜோனாதன் டேவிட், கத்தார் கோல் கீப்பருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். பந்தை தன் கட்டுப்பாட்டில் எடுத்தபோதெல்லாம் மின்னல் வேகத்தில், கோல் போஸ்ட்டை நோக்கி நகர்த்தி, கத்தார் வீரர்களை திணறடித்தார். 29வது நிமிடத்தில் தனது முதல் கோலை போட்ட அவர், கூடுதல் நேரத்தில் (45 +3 நிமிடம்) அடுத்த கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதியில், கனடா அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியிலும், ஆதிக்கம் செலுத்திய கனடா வீரர்கள் தொடர்ந்து கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட, அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. 64வது நிமிடத்தில், நாதன் சாலிபா, கனடா அணிக்காக 4வது கோலையும், 75வது நிமிடத்தில், முகமது மானாய் 5வது கோலையும் பதிவு செய்தனர்.

கூடுதல் நேரத்தில் (90+2 நிமிடம்) மீண்டும் அசத்திய ஜோனாதன் டேவிட், தனது மூன்றாவது கோலை அடித்து, உலகக்கோப்பை அரங்கில் தனது முதல் 'ஹாட்ரிக்' சாதனையை பதிவு செய்தார். கத்தார் அணியால் ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் கனடா அணி 6-0 என்ற கணக்கில் 'இமாலய' வெற்றி பெற்றது.

​வரலாற்று சாதனை:


உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் கனடா அணி பெறும் முதல் வெற்றி. இதனை அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்தில் கொண்டாடினர். மேலும் கனடா அணி, அடுத்த சுற்றுக்கான தனது வாய்ப்பையும் பிரகாசப்படுத்திக் கொண்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us