தேர்தலில் போட்டி என அபாண்டம்; அரசு வக்கீலிடம் விளக்கம் கேட்ட நீதிபதி
தேர்தலில் போட்டி என அபாண்டம்; அரசு வக்கீலிடம் விளக்கம் கேட்ட நீதிபதி
ADDED : டிச 18, 2025 07:36 AM

திருப்பரங்குன்றம் தீபத்துாண் வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு முன் நேற்று முன்தினம் ஆஜரான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், 'தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தேர்தலில் போட்டியிட தயாராகி கொண்டிருக்கிறார்' என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், நேற்று தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனிடம் அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதில் தமிழக அரசு சார்பில், காணொலியில் வாதாட முயன்றார் விகாஸ் சிங். அப்போது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறியது:
நேற்று முன்தினம் தீபத்துாண் ரிட் மேல் முறையீட்டு வழக்கு, இரு நீதிபதிகள் அமர்வில் வந்த போது, வாதத்தில் என்னைப் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். நாளிதழ்கள் படித்து அறிந்து கொண்டேன். இதற்கு விளக்கம் தேவை.
தற்போது தங்களிடம் பேச வாய்ப்பில்லை. தலைமைச் செயலரின் கருத்தை அறிய வேண்டியுள்ளது. அதுவரை காத்திருக்கவும். உங்கள் ஆடியோவை 'மியூட்' செய்து விடுங்கள். இவ்வாறு குறிப்பிட்ட நீதிபதி, தலைமை செயலரிடம் விசாரணையை தொடர்ந்தார்.

