மின் இணைப்பு வகையை மாற்ற ரூ.500 லஞ்சம்; இளநிலை பொறியாளர், லைன்மேன் கைது
மின் இணைப்பு வகையை மாற்ற ரூ.500 லஞ்சம்; இளநிலை பொறியாளர், லைன்மேன் கைது
ADDED : ஜூலை 18, 2026 03:12 PM

-நமது நிருபர்-
காரைக்குடி அருகே லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் மற்றும் லைன் மேனை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மணக்குடி மின் பகிர்மான அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக சையது முகமது பாஷா (48) மற்றும் லைன்மேன் ஆக பஞ்சு (36) ஆகியோர், வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் லைன்மேன் பஞ்சு, தற்காலிக பணியாளர். புதிய வீட்டிற்கான மின் இணைப்பு வகையை மாற்றித் தருவதற்காக இவர்கள் இருவரும் லஞ்சம் கேட்டுள்ளனர்.
இது குறித்து கிடைத்த புகாரின் பேரில், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் இருவரையும் கண்காணித்தனர். இன்று மின் நுகர்வோர் ஒருவரிடம் இருந்து ரூ.500 லஞ்சம் பெற்றதை கண்டு, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இருவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
