கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் எங்கே? வீட்டின் கேட்டுக்கு தவெக தொண்டர்கள் பூட்டு
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் எங்கே? வீட்டின் கேட்டுக்கு தவெக தொண்டர்கள் பூட்டு
ADDED : நவ 24, 2026 03:54 PM

கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மொபைல் போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினார் என்ற புகார் மீதான பரபரப்புக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவர் மீது தவெக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகள் தரப்பிலும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
சென்னை ஐகோர்ட்டில் நேற்றைய விசாரணையின் போது சம்பந்தப்பட்ட பெண் கலெக்டர் தரப்பில் இருந்து எவ்வித புகாரும் வரவில்லை என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தது. இதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி பெண் கலெக்டர் மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் இதுகுறித்து புகார் அளித்தார். எப்ஐஆரும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
புகார், எப்ஐஆர் என சட்ட நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளதை அறிந்த தவெகவினர் குற்றச்சாட்டுக்கு ஆளான கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டின் முன்பு குவிந்தனர். கூட்டம் அதிகமாகி பரபரப்பான சூழல் காணப்பட்டதால் வீட்டின் கேட்டுக்கு அவர்கள் பூட்டு போட்டனர்.
தவெகவினரும், பொதுமக்களும் எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீடு முன்பு குவிந்துள்ள விவரம் அறிந்த போலீசாரும் அங்கு பாதுகாப்புக்கு சென்றுள்ளனர். அதே நேரத்தில் அருள் விக்னேஷிடம் போலீசார் விசாரணை நடத்தவும், அவர் பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்தவும் எண்ணி உள்ளனர்.
