UPDATED : ஜூன் 29, 2026 11:56 AM
ADDED : ஜூன் 29, 2026 11:18 AM

நமது நிருபர்
கரூர் அதிமுக எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்துவிட்டு காரில் புறப்பட்டு சென்றார். அவர் நிருபர்களை சந்தித்து விளக்கம் அளிக்காமல் சென்றுவிட்டார்.
பிறகு எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி ராஜினாமா ஏற்கப்பட்டதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். ஏற்கனவே இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தற்போது கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கரும் பதவியை ராஜினாமா செய்தால், அதிமுகவின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 41 ஆக குறைந்துள்ளது.
தவெக பொது செயலாளர் ஆனந்த் முன்னிலையில் நடைபெறவுள்ள இணைப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் சேர்ந்து கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அதிமுகவில் 6வது விக்கெட்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
