sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

புதிய ஆட்சியாளராக கமேனியின் மகன் தேர்வு: ஈரான் அரசு மறுப்பு

/

புதிய ஆட்சியாளராக கமேனியின் மகன் தேர்வு: ஈரான் அரசு மறுப்பு

புதிய ஆட்சியாளராக கமேனியின் மகன் தேர்வு: ஈரான் அரசு மறுப்பு

புதிய ஆட்சியாளராக கமேனியின் மகன் தேர்வு: ஈரான் அரசு மறுப்பு

20


UPDATED : மார் 04, 2026 04:31 PM

ADDED : மார் 04, 2026 07:39 AM

Google News

UPDATED : மார் 04, 2026 04:31 PM ADDED : மார் 04, 2026 07:39 AM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்ட நிலையில், அவரது மகன் மொஜ்தபா, ஈரான் புதிய ஆட்சியாளர் மற்றும் மத குருவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், இதனை ஈரான் அரசு மறுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆட்சியாளரும், மதகுருவுமான கமேனி கொல்லப்பட்டார். டிரம்ப் கூறியபடி கமேனியை கொன்று விட்டாலும், ஈரான் மீதான தாக்குதல் இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும் என்று அமெரிக்கா அறிவித்தது. ஈரானின் இடைக்கால ஆட்சியாளராக அயதுல்லா அலிரேசா அராபி நியமிக்கப்பட்டார்.

ஈரானின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, புதிய தலைவர் தேர்வு செய்யும் வரை, இவரது தலைமையிலான கவுன்சில், நாட்டை வழிநடத்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அயதுல்லா கமேனியின் மகன் மொஜ்தபா ஈரான் புதிய ஆட்சியாளர் மற்றும் மத குருவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் மும்பையில் உள்ள இந்தியாவுக்கான ஈரான் தூதரகம், இந்த செய்தியை மறுத்துள்ளது. ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மை இல்லை எனவும், அதனை மறுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

யார் இந்த மொஜ்தபா?

* 1969ம் ஆண்டு மஷாத் நகரில் மொஜ்தபா பிறந்தார். இவர் ஒருபோதும் பதவி வகித்ததில்லை, ஆட்சியில் எந்த முறையான பதவியும் வகிக்கவில்லை. இருப்பினும் அவர் பின்னால் இருந்து செல்வாக்கை செலுத்தி வந்திருக்கிறார்.

* ஈரான்-ஈராக் போரின் போது அவர் ஈரான் ஆயுதப் படையுடன் இணைந்து மொஜ்தபா போராடினார். மறைந்த ஆட்சியாளர் அயதுல்லா கமேனியின் மனைவி, மகள், பேரக்குழந்தை, மருமகள் மற்றும் மருமகன் கொல்லப்பட்ட நிலையில், உயிர் பிழைத்த கமேனி குடும்ப உறுப்பினர்களில் மொஜ்தபாவும் ஒருவர்.

* 2019ம் ஆண்டில் அமெரிக்க கருவூலத் துறை மொஜ்தபா மீது தடைகளை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us