sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோடநாடு வழக்கை எப்போது முடிப்பீர்கள்; நீதிபதி கேள்வி

/

கோடநாடு வழக்கை எப்போது முடிப்பீர்கள்; நீதிபதி கேள்வி

கோடநாடு வழக்கை எப்போது முடிப்பீர்கள்; நீதிபதி கேள்வி

கோடநாடு வழக்கை எப்போது முடிப்பீர்கள்; நீதிபதி கேள்வி


ADDED : மார் 06, 2026 10:08 PM

Google News

ADDED : மார் 06, 2026 10:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: 'கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை எப்போது முடிப்பீர்கள்?' என, நீதிபதி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு, ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில், நீதிபதி முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கேரளாவை சேர்ந்த வாளையார் மனோஜ் மற்றும் சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் தலைமையிலான போலீசார் நேரில் ஆஜராகினர்.

விசாரணைக்கு பின், அரசு தரப்பு வழக்கறிஞர் கனகராஜ் கூறுகையில், ''விசாரணையின் போது, 'இந்த வழக்கு தொடர்பாக இதுவரை, 269 சாட்சிகளிடம் விசாரணை நடந்துள்ளது' என, நீதிபதியிடம் தெரிவித்தோம். 'இவ்வழக்கு எதற்காக இதுவரை நிலுவையில் உள்ளது. எப்போது முடிப்பீர்கள்?' என, புலன் விசாரணை அதிகாரிகளிடம், நீதிபதி கேள்வி எழுப்பினார்.

''அப்போது, 'குஜராத்தில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் இருந்து ஒரு 'ரிப்போர்ட்' வர வேண்டி உள்ளது. அதனால் தான் வழக்கு நிலுவையில் உள்ளது' என, விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கை ஏப்., 24ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்,'' என்றார்.






      Dinamalar
      Follow us