தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்

கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்

கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்

5


ADDED : நவ 19, 2026 03:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 03:27 PM

5


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு. சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை தோற்கடித்ததால் தமிழகம் முழுவதும் அறியப்பட்டார்.

உடல்நலக் குறைவால் செப்டம்பர் 9 ம் தேதி சென்னை அம்பத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து அவ்வபோது அறிக்கை வெளியிடப்பட்டன. முதல்வர் விஜய், அமைச்சர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. குழப்பமான சூழல் நிலவுகிறது. இதனால், அவரின் உடல்நிலை குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் எனக்கோரி கொளத்தூர் தொகுதியை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் வி.எஸ்.பாபு இன்று(நவம்பர் 19) பிற்பகல் 2:24 மணிக்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார்.

மாஜி திமுக உறுப்பினர். 2006 முதல் 2011 வரை திமுக எம்எல்ஏ ஆக இருந்துள்ளார். 2011 வரை வட சென்னை மாவட்ட திமுக செயலாளர் பதவி வகித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினுக்காக பணியாற்றினார். திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். 2016 ல் அதிமுகவில் இணைந்தார்.

2026 பிப்ரவரி 7 ல் தவெகவில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டார். 8,795 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us