தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ விஎஸ் பாபு உடல்நிலை முன்னேற்றம்

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ விஎஸ் பாபு உடல்நிலை முன்னேற்றம்

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ விஎஸ் பாபு உடல்நிலை முன்னேற்றம்

13


ADDED : செப் 19, 2026 12:58 PM

Follow on GoogleFavourite on Google

13

ADDED : செப் 19, 2026 12:58 PM


13
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் என எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏவாக இருப்பவர் வி.எஸ். பாபு. செப்.9ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டார். பிறகு அவர் அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று (செப் 19) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை சீராக உள்ளது; பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த டாக்டர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்.

தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவர் உடல்நிலை ஒத்துழைப்பு அளிக்கிறது. இவ்வாறு மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us