தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ராமரை அடுத்து கிருஷ்ணர்!: உ.பி.,யில் பாஜ தேர்தல் வியூகம்

ராமரை அடுத்து கிருஷ்ணர்!: உ.பி.,யில் பாஜ தேர்தல் வியூகம்

ராமரை அடுத்து கிருஷ்ணர்!: உ.பி.,யில் பாஜ தேர்தல் வியூகம்

24


ADDED : நவ 22, 2026 12:53 AM

Follow on GoogleFavourite on Google

24

ADDED : நவ 22, 2026 12:53 AM


24
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மொத்தம், 403 சட்டசபை தொகுதிகளுடைய இங்கு அடுத்தாண்டு பிப்ரவரி-யில் தேர்தல் நடக்கிறது. அங்கு தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், தற்போதே தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கி விட்டார்.

உ.பி., தேர்தல் என்றாலே ஜாதி, மதம் போன்றவை தான் முக்கிய பங்கு பெறும். பிற்பட்டவர்கள், பட்டியின மக்கள் என, அனைத்து தரப்பு வாக்காளர்களையும் கட்சிகள் தன் பக்கம் இழுக்க முயற்சிகளை மேற்கொள்ளும்.

சமாஜ்வாதியை யாதவர்களின் கட்சி என, மற்ற கட்சிகள் குற்றம் சாட்டும். எனவே, இந்த முறை மற்ற ஜாதியினரையும் தன் பக்கம் கொண்டு வரவே அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு செல்கிறார் அகிலேஷ்.

இது, பா.ஜ.,வில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், 'உங்களுடன் ராகுலும் வருகிறாரா' என, கேள்வி கேட்க தொடங்கி விட்டனர் பா.ஜ.,வினர். அதோடு, 'ராதே ராதே கமல் கிலாதே' புதிய கோஷத்தையும் எழுப்ப ஆரம்பித்து விட்டனர். தாமரை பூவை பூக்க வையுங்கள் என்பது தான் இதன் அர்த்தம். வட மாநிலங்களில் குறிப்பாக, கிருஷ்ணர் பிறந்த இடமான மதுராவில், ஒருவரை ஒருவர் சந்தித்தால், 'நமஸ்தே' என்பதற்கு பதிலாக, 'ராதே ராதே' என்று தான் சொல்வர்.

கிருஷ்ணர் பிறந்த இடத்திற்கு பக்கத்திலேயே சஹி ஈத்கா என்ற மசூதி உள்ளது. இந்த இடம் கிருஷ்ணர் கோவிலுக்கு சொந்தமானது என, ஏற்கனவே பிரச்னை உள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், உ.பி., சட்டசபை தேர்தலில், இதை ஒரு முக்கிய பிரச்னையாக்க பா.ஜ., முடிவெடுத்து களத்தில் இறங்கியுள்ளது. சென்ற தேர்தலில் ராமர், இந்த முறை கிருஷ்ணர்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us