நில அபகரிப்பு வழக்கு; அழகிரியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
நில அபகரிப்பு வழக்கு; அழகிரியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
UPDATED : டிச 08, 2025 02:21 PM
ADDED : டிச 08, 2025 02:20 PM

புதுடில்லி: நில அபகரிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையில் கோவிலுக்குச் சொந்தமான 44 சென்ட் இடத்தை அபகரித்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி (கருணாநிதி மகன்) உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்தும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரியும் முக அழகிரி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ஏன் எதிர்கொள்ளக் கூடாது என்று அழகிரி தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சரியான கருத்தை தான் பிறப்பித்துள்ளது. எனவே, வழக்கை நீங்கள் அங்கே சந்திக்குமாறு கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

