இஸ்ரேலை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்; அமெரிக்க ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
இஸ்ரேலை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்; அமெரிக்க ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
UPDATED : பிப் 27, 2026 10:51 PM
ADDED : பிப் 27, 2026 09:54 PM

வாஷிங்டன்: இஸ்ரேலில் உள்ள அமெரிக்க துாதரகத்தில், அவசரகால பணிகளுக்கு தேவைப்படாத ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், அங்கிருந்து வெளியேறும்படி அமெரிக்கா அறிவித்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மேற்காசிய நாடான ஈரான் - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகாவிட்டால், ஈரான் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் இஸ்ரேல் மீதும் ஈரான் எந்நேரத்திலும் அதிரடி தாக்குதல் நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க துாதரகத்தில், அவசரகால பணிகளுக்கு தேவைப்படாத ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், அங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேலுக்கான அமெரிக்க துாதர் மைக் ஹக்கபி வலியுறுத்தி உள்ளார்.
பாதுகாப்பற்ற சூழல் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதால், விமான போக்குவரத்து போதிய அளவில் இருக்கும் போதே வெளியேறுவது பாதுகாப்பானது எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

