தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மக்கள்தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக செய்து முடிப்போம்: முதல்வர் விஜய் அழைப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக செய்து முடிப்போம்: முதல்வர் விஜய் அழைப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக செய்து முடிப்போம்: முதல்வர் விஜய் அழைப்பு

5


UPDATED : ஜூலை 17, 2026 05:44 PM

ADDED : ஜூலை 17, 2026 05:39 PM

Follow on GoogleFavourite on Google

5

UPDATED : ஜூலை 17, 2026 05:44 PM ADDED : ஜூலை 17, 2026 05:39 PM


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: மக்கள்தொகை கணக்கெடுப்பை எல்லோரும் சேர்ந்து வெற்றிகரமாக செய்து முடிப்போம் என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

நாட்டின் முன்னேற்றத்துக்கும், எதிர்கால திட்டமிடுதலுக்கும் உதவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன. அதன் முன்னோட்டமாக, குடும்பத்தினர் தங்கள் சுய விவரங்களை பதிவு செய்யும் பணி, இன்று ஜூலை 17ல் தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்க வேண்டும் என கவர்னர் அர்லேகர் உள்ளிட்டோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில்,முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அன்பார்ந்த தமிழக மக்களுக்கு வணக்கம்!

நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள். இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் - நான் பதிவு செய்துள்ளேன்!

உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!. இவ்வாறு அந்தப் பதிவில் முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

ஆய்வு

இதனிடையே சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதிக்கு எந்த முன்னறிவிப்புமின்றி முதல்வர் விஜய் சென்றார். விடுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர், மாணவர்களின் குறைகளை கேட்டறிந்ததுடன், அங்கு நடக்கும் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார்.



தினமலரில் நேரலை


முதல்வர் விஜய், மக்கள் தொகை கணக்கெடுப்பில், இணையவழியில் சுயமாக பதிவு செய்தது குறித்த செய்தி தினமலர் இணையதளம் மற்றும் சமூக வலைதளத்தில் நேரலை செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us