பொய்ப்புகார் தெரிவிக்கும் திமுக, அதிமுக; அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு
பொய்ப்புகார் தெரிவிக்கும் திமுக, அதிமுக; அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு
UPDATED : அக் 05, 2026 03:14 PM
ADDED : அக் 05, 2026 02:42 PM

திருச்சி: ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக வரும் புகாரில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். திமுக, அதிமுகவினர் பொய்ப்புகார் தெரிவித்து வருகின்றனர் என அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சியில் நிருபர்களிடம் அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை; கடந்த சட்டசபை தேர்தலில் பணத்தை நம்பி நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. நாங்கள் மதம், ஜாதியை நம்பி தேர்தலில் நிற்கவில்லை. மக்களை நம்பி தான் தேர்தலின் நின்றோம். எங்களுக்கு கிடைத்த அனைத்து ஓட்டுக்களும், முதல்வர் விஜய்யோட ஓட்டு.
நாங்கள் நேர்மையாக மக்களிடம் ஓட்டு கேட்டு இருக்கிறோம். 2026ம் ஆண்டு தேர்தலுக்கு முந்தைய நாள் வரை திமுக ஆட்சியில் இருந்தது. ஸ்டாலின் முதல்வராக இருந்தார். எங்களது பிரசாரத்தை எந்த அளவுக்கு முடக்க முயற்சி செய்தார். என்ன தான் உங்களுக்கு பிரச்னை? முதல்வர் விஜய் மக்களை சந்திக்கிறார். மக்களை சந்திக்க வில்லை என்றாலும் பிரச்னையாக இருக்கிறது. சந்தித்தாலும் பிரச்னையாக இருக்கிறது. எல்லாமே பிரச்னையாக இருக்கிறது என்றால் தப்பு உங்கள் பக்கம் இருக்கிறது.
நீங்கள் மக்கள் பணியை ஒழுங்காக செய்து இருந்தீர்கள் என்றால் இது எல்லாம் உங்களுக்கு பிரச்னையாக தெரியாது. இது ஜனநாயக நாடு, விமர்சனம் பண்ற உரிமை அவங்களுக்கு இருக்கு, அதை மறுக்கும் உரிமை எங்களுக்கு இருக்கு; ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக வரும் புகாரில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். திமுக, அதிமுகவினர் பொய்ப்புகார் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அமைச்சர் ரமேஷ் பரபரப்பு பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
