ADDED : டிச 17, 2025 02:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெர்லின்: ஜெர்மனிக்கு சென்றுள்ள லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அங்குள்ள கார் ஷோரூமை பார்வையிட்டார்.
பார்லி குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 19ம் தேதி வரை நடக்கிறது. கூட்டத்தொடர் இன்னமும் நிறைவு பெறாத சூழலில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு காங்கிரசின் அயலக அணி தலைவர்களை சந்திக்க உள்ளார்.
பார்லி கூட்டத் தொடரை புறக்கணித்து விட்டு, ராகுல் ஜெர்மனிக்கு சென்றிருப்பதை பாஜ கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில், பெர்லினில் உள்ள கார் ஷோரூமை பார்வையிட்டார். இது தொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 6 மாதங்களில் மட்டும் ராகுலின் 4வது வெளிநாட்டு பயணம் இதுவாகும். முன்னதாக பிரிட்டன், மலேசியா, பிரேசில் - கொலம்பியாவுக்கு சென்றிருந்தார்.

