தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/'மேக் இன் இந்தியா' திட்டத்தால் எல்லா துறைகளிலும் முன்னேற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்

'மேக் இன் இந்தியா' திட்டத்தால் எல்லா துறைகளிலும் முன்னேற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்

'மேக் இன் இந்தியா' திட்டத்தால் எல்லா துறைகளிலும் முன்னேற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்

1


UPDATED : செப் 26, 2026 04:05 AM

ADDED : செப் 26, 2026 04:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2026 04:05 AM ADDED : செப் 26, 2026 04:01 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டம் வெற்றியடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இத்திட்டம் தொடங்கி 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் அதிக உற்பத்தி; இந்தியாவில் அதிக முதலீடு; இந்தியாவில் இருந்து அதிக ஏற்றுமதி, என பல்வேறு துறைகளிலும் மாற்றம் தெளிவாக தெரிகிறது. இந்தியா வளர்ச்சி அடைந்து வளம் பெறுவதற்கு தேவையான உள்கட்டமைப்பு, தொழில் மற்றும் புதுமைகளை உருவாக்குவதே 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் நோக்கம்” என தெரிவித்துள்ளார்.

செமிகண்டக்டர், விண்வெளி மற்றும் விமானத் துறை, ரயில் இன்ஜின்கள் மற்றும் பெட்டிகள் தயாரிப்பு, கப்பல் கட்டுமானம், மெட்ரோ ரயில் வலையமைப்பு, ஆட்டோமொபைல், மருந்துகள், சூரிய மின் உற்பத்தி, மொபைல் போன் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை விளக்கும் வீடியோவையும் பிரதமர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவை உலகளாவிய உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் புதுமை மையமாக உருவாக்கும் நோக்கில், 'மேக் இன் இந்தியா' திட்டம் 2014 செப்., 25ல் தொடங்கப்பட்டது. முதலீடுகளை எளிதாக்குதல், புத்தாக்கங் களை ஊக்குவித்தல் மற்றும் உலக தரத்திலான உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றில் 'மேக் இன் இந்தியா' திட்டம் கவனம் செலுத்துகிறது.

'குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்' என்ற கொள்கையின் அடிப்படையில், நடைமுறைகள் மற்றும் கொள்கைகளை நவீனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் அடுத்த கட்டமாக 'மேக் இன் இந்தியா - 2.0' திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது, உற்பத்தி துறையில் 15 மற்றும் சேவைகள் துறையில் 12 என மொத்தம் 27 துறைகள் இத்திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ளன.

உ லகிற்காக உற்பத்தி செய்யும் நாடு
இந்தியாவின் உற்பத்தி துறை, உள்நாட்டு சந்தைக்காக மட்டுமே பொருட்களை தயாரிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது. மேக் இன் இந்தியா திட்டத்தின் வாயிலாக, நம் நாடு தற்போது உலகளாவிய சந்தைகளுக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் நிலைக்கு முன்னேறியுள்ளது.
- பீயூஷ் கோயல், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us