ADDED : அக் 11, 2025 11:24 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில், வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட விபத்தில், 18 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் டென்னிசி கிராமப்புறத்தில் ஒரு ராணுவ வெடிமருந்து ஆலை செயல்பட்டு வருகிறது. அங்கு திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பல மைல்களுக்கு அப்பால் உள்ள வீடுகளையும் உலுக்கியது. இந்த விபத்தில் ஒரு கட்டடம் இடிந்து தரைமட்டம் ஆனது.
இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இடிந்த தரைமட்டமான கட்டடங்களில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. ''நாங்கள் எங்களது வீடு இடிந்து விழுந்தது போல் உணர்ந்தோம். பெரிய வெடி சத்தம் கேட்டது'' என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என டென்னிசி கவர்னர் பில் லீ தெரிவித்தார். அவர், இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.