தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ பிலிப்பைன்ஸில் பிரமாண்ட சொகுசு கப்பலில் பயங்கர தீ; 5 பேர் பலி... 80க்கும் மேற்பட்டோர் மாயம்

பிலிப்பைன்ஸில் பிரமாண்ட சொகுசு கப்பலில் பயங்கர தீ; 5 பேர் பலி... 80க்கும் மேற்பட்டோர் மாயம்

பிலிப்பைன்ஸில் பிரமாண்ட சொகுசு கப்பலில் பயங்கர தீ; 5 பேர் பலி... 80க்கும் மேற்பட்டோர் மாயம்


ADDED : செப் 10, 2026 10:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2026 10:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மணிலா: பிலிப்பைன்ஸில் பயணிகள் சொகுசு கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீயில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

தலைநகர் மணிலாவிலிருந்து சுற்றுலாத் தலமான பலாவனின் கொரோன் பகுதிக்குச் சென்ற 'எம்வி ஜூன் ஆஸ்டர்' என்ற பிரமாண்ட சொகுசு கப்பலில் 117 பயணிகள், 17 ஊழியர்கள் என மொத்தம் 134 பேர் சென்று கொண்டிருந்தனர். நடுக்கடலில் சென்று கொண்டிருந்த போது, கப்பலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது கப்பலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

கொளுந்து விட்டு எரிந்த இந்தத் தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் தீயில் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்துள்ளனர். அவர்களில் ஒருசிலர் மீட்கப்பட்ட நிலையில், 80க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் பிலிப்பைன்ஸ் கடற்படையினர் தேடி வருகின்றனர்.

இதனிடையே, கப்பலில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கீழ்த்தளப் பகுதியில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக உயிர் தப்பிய ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், கப்பலில் ஏற்பட்ட தீவிபத்து குறித்த துல்லியமான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us