அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கட்டும்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கட்டும்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
UPDATED : ஜன 01, 2026 08:27 AM
ADDED : ஜன 01, 2026 08:25 AM

புதுடில்லி: 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2026ம் ஆண்டு பிறந்ததையொட்டி, உலகம் முழுவதும் புதிய ஆண்டை வரவேற்று மக்கள், பொது இடங்களில் ஒன்று கூடி, ஆடல், பாடல்களுடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். புத்தாண்டில் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய மக்கள் கோவில்கள், தேவாலயங்களில் கூடினர்.
மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் ஒரு அற்புதமான 2026ம் ஆண்டு அமைய வாழ்த்துகிறேன். நாட்டு மக்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வளமாக வாழ வாழ்த்துக்கள்.
உங்கள் முயற்சிகளில் வெற்றியும், நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களிலும் பலன் கிடைக்கட்டும். சமூகத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவ பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

