தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/திமுகவுக்கு மதிமுக; மதிமுகவுக்கு எம்எல்ஏக்கள் 2 பேர் 'டாட்டா!'

திமுகவுக்கு மதிமுக; மதிமுகவுக்கு எம்எல்ஏக்கள் 2 பேர் 'டாட்டா!'

திமுகவுக்கு மதிமுக; மதிமுகவுக்கு எம்எல்ஏக்கள் 2 பேர் 'டாட்டா!'

38


UPDATED : ஜூன் 27, 2026 02:39 PM

ADDED : ஜூன் 27, 2026 12:01 PM

Follow on GoogleFavourite on Google

38

UPDATED : ஜூன் 27, 2026 02:39 PM ADDED : ஜூன் 27, 2026 12:01 PM


38
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்


சென்னை: திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக, மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மதிமுகவுக்கு அக்கட்சி எம்எல்ஏக்கள் 2 பேர் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம், அக்கட்சி அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜுனன் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடந்தது. ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, பொருளாளர் செந்திலதிபன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ம.தி.மு.க.,வின் இரு எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரான சீர்காழி தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில்செல்வன், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.கடையநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் மட்டும் கூட்டத்தில் பங்கேற்றார். இந்நிலையில் இன்றைய பொதுக்குழுவில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் கடையநல்லூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் கலந்து கொள்ளவில்லை.

விலகியது மதிமுக!

திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

வைகோவை நேசிக்கிறேன்!

கடையநல்லூர் மதிமுக எம்.எல்.ஏ., ராஜேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வைகோவை உண்மையாக நேசிக்கிறேன். 42 ஆண்டுகளாக வைகோ மீது நான் வைத்திருக்கும் அன்பும், விசுவாசமும் உண்மையானது. அதேபோல் ஓட்டளித்த மக்கள் பெருமைப்படுகின்ற வகையிலும், ஓட்டளிக்காத மக்கள் இவருக்கு ஓட்டளிக்க தவறிவிட்டோமே என்று நினைக்கின்ற வகையிலும் எனது செயல்பாடுகள் இருக்கும் என்று தொகுதி மக்களிடம் நானும், வைகோவும் பேசி ஏற்படுத்தி வைத்திருக்கும் நம்பிக்கையும் உண்மையானது. எஞ்சியுள்ள நம் வாழ்வில் எவ்வித களங்கமும் சுமக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



துரை வைகோவும் வரவில்லை

மதிமுக நேற்று நடத்திய கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம், இன்று நடத்திய பொதுக்குழு கூட்டம் இரண்டிலும், கட்சியின் எம்.பி.,யான துரை வைகோ கலந்து கொள்ளவில்லை. வைகோவுக்கும், அவருக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, துரை வைகோ இவ்வாறு கூட்டத்தை புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரத்யேக வீடியோ!

ஓட்டம் பிடித்த 2 எம்எல்ஏக்களால் அதிர்ச்சியில் உறைந்த வைகோ; திமுக கூட்டணிக்கு மதிமுக முழுக்கு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

திமுகவுக்கு டாட்டா சொன்ன கட்சிகள்!

தேர்தலின் போது திமுக கூட்டணியில் இடம்பெற்ற நிலையில், தற்போது அக்கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகள் பின்வருமாறு:

* காங்கிரஸ்

* இந்திய கம்யூனிஸ்ட்

* மார்க்சிஸ்ட்

* விடுதலை சிறுத்தைகள்

* முஸ்லிம் லீக்

* மதிமுக

மிஞ்சிய கட்சிகள்

திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறி வரும் நிலையில், மிஞ்சியுள்ள கட்சிகளின் பட்டியல்

1.தேமுதிக

2.மனிதநேய மக்கள் கட்சி

3.மனிதநேய ஜனநாயக கட்சி

4.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

5.முக்குலத்தோர் புலிப்படை

6.தமிழர் தேசம்

7.எஸ்.டி.பி.ஐ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us