மெட்டா நிறுவனத்தின் சேவை முடக்கம்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்கள் அவதி
மெட்டா நிறுவனத்தின் சேவை முடக்கம்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்கள் அவதி
ADDED : ஜூன் 12, 2026 08:56 PM

புதுடில்லி: மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பயனர்கள் அவதி அடைந்தனர்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனத்தின் தாய் நிறுவனமாக மெட்டா நிறுவனம் உள்ளது. இன்று மாலை முதல் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் படிப்படியாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலி மற்றும் இணையதளங்கள் முடங்கத் துவங்கின. செயலியை திறந்ததும், அது தானாக லாக் அவுட் ஆகியதாகவும், மீண்டும் உள்ளே நுழையும்போது முடியவில்லை என பயனர்கள் தெரிவித்துள்ளனர். இணையதளத்தில் வெற்று பக்கம் காட்டியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால், அவதியடைந்த பயனர்கள், மற்ற சமூக வலைதளங்களில் இது குறித்து புகார் தெரிவிக்க துவங்கினர்.இன்ஸ்டாகிராம் முடங்கியதாக 7:45 மணியளவில் 7,500 பேர் அந்த நிறுவுனத்திற்கு புகார்அளித்து இருந்தனர். தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது.
இது தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது: எங்களது சேவைகளை பெறுவதில் பயனர்கள் அவதி அடைந்து வருவது குறித்து அறிந்துள்ளோம். அதனை சரி செய்யும் பணி நடந்து வுருகிறது எனத் தெரிவித்தார். அதே நேரத்தில் என்ன காரணம் என அவர் கூறவில்லை.
இந்தியா மட்டுமல்லாமல், அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் இந்த பிரச்னை உணரப்பட்டதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
