ADDED : ஜூலை 02, 2026 02:08 AM

சென்னை: 'நாடு முழுதும், இந்த மாதம் இயல்பை விட அதிக வெயில் அடிக்கும். மிக குறைந்த அளவே மழைப்பொழிவு இருக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம், இந்த மாதத்துக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுதும், இந்த மாதத்தின் இயல்பான மழைப்பொழிவான 28 செ.மீ., என்ற அளவை விட குறைவாக இருக்கும்.
அதேசமயம், வடமேற்கு, வடகிழக்கின் சில பகுதிகள், மத்திய கிழக்கு, கிழக்கு தீபகற்ப பகுதிகளில், இயல்பான அல்லது அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பநிலையை பொறுத்தவரை, மேற்கு - மத்திய பகுதிகளைத் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், பகல், இரவு நேரத்தில் இயல்பை விட அதிக வெப்பம் நிலவும்.
தற்போதைய தென் மேற்கு பருவக்காற்றி ன் முன்பருவத்தில் மழைப்பொழிவு குறைவதால், வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
