தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு; மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு

60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு; மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு

60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு; மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு

7


ADDED : அக் 27, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

7

ADDED : அக் 27, 2026 05:32 AM


7
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது சிறப்பு நிருபர் -

ஏஐ தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எண்ட்ரி லெவல், மிட் லெவல் பணிகள் பலவற்றிலும் முன்னணி ஐடி நிறுவனங்களே ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே அமேசான், ஆரக்கிள் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்தது. உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் 60 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ தொழில்நுட்பம்) உள்ளிட்டவற்றில் முதலீடுகளை அதிகரிக்கவும், செலவுகளைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள ஊழியர்கள் பணி வாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

டேட்டா செண்டர்கள், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட்டின் ஆண்டு அறிக்கையின்படி, 2026ம் ஆண்டு

ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, அந்நிறுவனத்தில் உலகளவில் 2,23,000 முழுநேர ஊழியர்கள் இருந்தனர்.

விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்றுக்கொண்டு வெளியேறும் ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிலையான பணிநீக்க இழப்பீடு, நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து கிடைப்பதற்கான வழிமுறைகள், தொழில் மாற்றத்திற்கான உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவு செய்ய வேண்டும். விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்கும் ஊழியர்கள் டிசம்பர் 31 அன்று நிறுவனத்தில் இருந்து வெளியேறுவார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us