தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/மைக்ரோசாப்ட் அவுட்லுக் செயல் இழந்தது; வலைதளங்களில் 'மீம்' கொண்டாட்டம்

மைக்ரோசாப்ட் அவுட்லுக் செயல் இழந்தது; வலைதளங்களில் 'மீம்' கொண்டாட்டம்

மைக்ரோசாப்ட் அவுட்லுக் செயல் இழந்தது; வலைதளங்களில் 'மீம்' கொண்டாட்டம்

11


UPDATED : நவ 13, 2026 11:10 AM

ADDED : நவ 13, 2026 11:08 AM

Follow on GoogleFavourite on Google

11

UPDATED : நவ 13, 2026 11:10 AM ADDED : நவ 13, 2026 11:08 AM


11
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-

மைக்ரோசாப்ட் அவுட்லுக், டீம்ஸ், மைக்ரோசாப்ட் 365 ஆகியவை உலகம் முழுவதும் செயல் இழந்ததை ஐடி நிறுவன ஊழியர்கள் மீம் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். தொழில், வர்த்தக நிறுவன ஊழியர்களுக்கு அவுட்லுக் மெயில் சேவை, டீம்ஸ் ஆகியவை அத்தியாவசியம்.

அலுவலக கூட்டங்களுக்கும், தகவல் பரிமாற்றத்துக்கும் இந்த சேவைகள் தவிர்க்க முடியாதவையாக உள்ளன. அவற்றின் சேவை இன்று அதிகாலை உலகம் முழுவதும் செயல் இழந்தது. இவற்றுடன் தொடர்புடைய ஓப்பன் ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் ஏஐ சேவைகளும் பாதிக்கப்பட்டன. 7 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சேவைகள் இல்லாமல், உலகம் முழுவதும் தொழில், வர்த்தக நிறுவனங்களில் பணிகள் முடங்கின.

இதனால் வேலை இன்றி இருந்த பலரும், வலைதளங்களில் மீம் படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். மிஸ்டர் பீன் படங்களில் வரும் கேலிப்படங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

வார இறுதிக்கு முன்னதாக ஒரு நாள் சும்மா விடுமுறை கிடைத்து விட்டதை மதுவுடன் கொண்டாடுவது போலவும், வீடியோக்கள் வெளியாகியுள்ளன. வேலை செய்யாத கம்ப்யூட்டரை தட்டிப்பார்த்து உடைப்பது போலவும், இ-மெயில்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை என்றும், வலைதளங்களில் மீம்கள் வெளியாகியுள்ளன. வேலை இல்லாத ஊழியர்கள், அலுவலகங்களில் ஓடிப்பிடித்து விளையாடுவது, பொம்மை துப்பாக்கியால் சுட்டுச்சுட்டு விளையாடுவது போன்ற வீடியோவும் வைரல் ஆகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us