sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோடீஸ்வரர்கள் சராசரி 22% உயர்வு வருமான வரி தாக்கலில் தெரியவந்தது

/

கோடீஸ்வரர்கள் சராசரி 22% உயர்வு வருமான வரி தாக்கலில் தெரியவந்தது

கோடீஸ்வரர்கள் சராசரி 22% உயர்வு வருமான வரி தாக்கலில் தெரியவந்தது

கோடீஸ்வரர்கள் சராசரி 22% உயர்வு வருமான வரி தாக்கலில் தெரியவந்தது

1


UPDATED : ஜன 08, 2026 07:48 AM

ADDED : ஜன 08, 2026 01:13 AM

Google News

UPDATED : ஜன 08, 2026 07:48 AM ADDED : ஜன 08, 2026 01:13 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நம் நாட்டில் வருமானவரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை சிறிதளவே உயர்ந்துள்ள நிலையில், உயர் வருவாய் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது, வரி தாக்கலுக்கு உதவும் இ - பைலிங் தளம் வாயிலாக தெரியவந்துள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2025- 26ம் நிதியாண்டில், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவோர் எண்ணிக்கை, 22 சதவீதம் உயர்ந்துள்ளது. வரி தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை ஒரு சதவீத உயர்வை மட்டுமே சந்தித்துள்ளது. 2025 - 26 மதிப்பீட்டு ஆண்டுக்கான வரி தாக்கல் செய்ய, கடந்த டிச.,31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேவேளை, 5 லட்சத்துக்கு மேல் 10 கோடி ரூபாய்க்கு மேலும் வருமானம் ஈட்டியோரின் என்ணிக்கை, இரட்டை இலக்க வளர்ச்சியில் உள்ளது. இவ்வாறு கூறப்பட்டு உள்ளது. நாட்டில் உயர் வருவாய் ஈட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இது காட்டுகிறது. Image 1518621

மேலும், கறாரான வருமான வரி கணக்கீட்டு நடைமுறைகள், தரவுகளை விரிவாக அலசும் போக்கு, ஏ.ஐ.எஸ்., டி.டி.எஸ்., டி.சி.எஸ்., நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் விளைவாக, உயர் வருவாய் ஈட்டுவோர் முறையான வரி தாக்கல் நடைமுறைக்குள் வந்துவிடுவதாக நிதி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us