தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அடுத்தடுத்து எதிர்ப்பு: அமைச்சர் அனிதா தவிப்பு!

அடுத்தடுத்து எதிர்ப்பு: அமைச்சர் அனிதா தவிப்பு!

அடுத்தடுத்து எதிர்ப்பு: அமைச்சர் அனிதா தவிப்பு!

5


ADDED : ஏப் 06, 2026 11:49 PM

Follow on GoogleFavourite on Google

5

ADDED : ஏப் 06, 2026 11:49 PM


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி: பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம், ஏதாவது ஒரு காரணத்தை கூறி, மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிர்ச்சியில் உள்ளார்.

திருச்செந்துார் தொகுதியில், தொடர்ந்து ஏழாவது முறையாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். சில நாட்களுக்கு முன், கள்விளை என்ற கிராமத்திற்கு பிரசாரத்திற்கு சென்ற அவரது வாகனத்தை, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில், கோட்டூர் பகுதி பகுதியில், நேற்று இரவு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரசார வாகனத்தை, 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். அமைச்சரின் சமாளிப்பை ஏற்காத மக்கள், அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அந்த பகுதியில் பிரசாரம் செய்யாமல், அவர் வாகனத்தில் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

தொகுதிக்குள் ஓட்டு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அமைச்சர், அவரது ஆதரவாளர்கள் பரிதவித்து நிற்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us