திமுகவை துாக்கி விட்ட தவெக; அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு
திமுகவை துாக்கி விட்ட தவெக; அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு
ADDED : செப் 07, 2026 10:14 PM

சென்னை: ''நாங்க கூட முதல்வர் பேசும் போது, உட்கார்ந்து தான் கேட்டோம். அவர் மீது கொண்ட பக்தி காரணமாக, நின்று கொண்டே மரியாதையாக கேட்ட, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு நன்றி,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
சட்டசபையில், அவர் பேசியதாவது: ஒத்தை ஆளு. ஒரு மணி நேரம் பேசிய போது, உண்மையின் சத்தம் என்ன என்று உலகத்திற்கே தெரிந்தது. நாங்க கூட முதல்வர் பேசும் போது, உட்கார்ந்து தான் கேட்டோம்.
அவர் மீது கொண்ட பக்தி காரணமாக, தி.மு.க., எம்.எல்.ஏ,க்கள் நின்று கொண்டே மரியாதையாக கேட்டாங்க. அவை மாண்பை உடைத்து, இங்கே தரையில் உட்கார்ந்தாங்க.வேகமாக உட்கார்ந்துட்டாங்க.
ஆனால், எழுந்திருக்க முடியவில்லை. எங்கள் முதல்வர் தான் எழுந்து, கைகொடுத்து துாக்கி விட்டார். தரையில் அமர்ந்த தி.மு.க.,வை துாக்கி விட்ட த.வெ.க., என்பது போல், இந்நிகழ்வு அமைந்தது. அரசியலில் இதெல்லாம் சகஜம். இவ்வாறு, அவர் பேசினார்.
