தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/புதிய சரித்திரம் படைத்தார் மோடி!

புதிய சரித்திரம் படைத்தார் மோடி!

புதிய சரித்திரம் படைத்தார் மோடி!

11


UPDATED : ஜூன் 10, 2026 02:12 PM

ADDED : ஜூன் 10, 2026 01:56 PM

Follow on GoogleFavourite on Google

11

UPDATED : ஜூன் 10, 2026 02:12 PM ADDED : ஜூன் 10, 2026 01:56 PM


11
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- சிறப்பு செய்தியாளர்-

தொடர்ந்து அதிக நாட்கள் பதவி வகிக்கும் பிரதமர் என்ற சாதனையை பிரதமர் மோடி இன்று படைத்தார்.

2014 ம் ஆண்டு மே 26 ம் தேதி பிரதமராக மோடி பதவியேற்றார் . அது முதல் தற்போது வரை அப்பொறுப்பில் தொடர்ந்து நீடித்து வருகிறார். 2026 ஜூலை 25 ல் முன்னாள் பிரதமர் இந்திராவின் மிக நீண்ட நாட்கள் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தார் என்ற சாதனையை முறியடித்தார். முன்னாள் பிரதமர் இந்திரா 4077 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்துள்ளார்.

இந்தியாவின் முதல் பிரதமரான நேரு,1952 மே 13 ம்தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பதவியேற்றார். தொடர்ந்து 4,398 நாட்கள் பிரதமராக பணியாற்றினார்.தற்போது அந்த சாதனையை முறியடித்து பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார்.

இதுவரை பிரதமராக பதவி வகித்தவர்கள், எத்தனை நாட்கள் அந்தப் பதவியில் இருந்தார்கள் என்ற விவரம்:

பிரதமர் - பதவி வகித்த நாட்கள்

மோடி - 4399 நாள் (இன்றுடன்)

நேரு - 4398 நாள்

இந்திரா - 4078 நாள்

மன்மோகன் - 3657 நாள்

வாஜ்பாய் - 2257 நாள்

ராஜிவ் - 1859 நாள்

நரசிம்மராவ் - 1792 நாள்

மொரார்ஜி - 857 நாள்

சாஸ்திரி - 582 நாள்

வி.பி.சிங் - 344 நாள்

பாராட்டு

தொடர்ந்து நீண்ட நாட்கள் பதவி வகிக்கும் பிரதமர் என்ற சாதனை படைத்த மோடிக்கு, இன்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.

Image 1586339

தீர்மானம்

மேலும், நீண்ட கால பிரதமர் பதவி வகித்தவர் என்ற சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொண்டு வந்தார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us