அணு ஆயுத திட்டத்தை ஈரான் நிறுவனத்திற்கு விற்க முயற்சி; போலி விஞ்ஞானியிடம் நடத்திய விசாரணையில் திடுக் தகவல்
அணு ஆயுத திட்டத்தை ஈரான் நிறுவனத்திற்கு விற்க முயற்சி; போலி விஞ்ஞானியிடம் நடத்திய விசாரணையில் திடுக் தகவல்
ADDED : நவ 05, 2025 07:33 PM

மும்பை: அணு ஆயுத திட்டத்தை ஈரான் நிறுவனத்திற்கு விற்க முயன்றது, போலீசாரால் கைது செய்யப்பட்ட 60 வயது போலி விஞ்ஞானியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது; பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானியாக ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த அக்தர் உசேன் குத்புதீன் அகமது,60, என்பவர் நடித்துள்ளார். இவரும், இவருடைய சகோதரர் உசேன்,59, என்பவரும் அடிக்கடி டெஹ்ரான் சென்றுள்ளனர். அங்கு இந்தியா மற்றும் துபாயில் உள் ஈரான் தூதரகங்களுக்கு பலமுறை சென்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் விஞ்ஞானிகளைப் போல நடித்து, ஈரானைச் சேர்ந்த நிறுவனத்திடம், ஆராய்ச்சி ஒத்துழைப்பு என்ற பெயரில், விபிஎன்னை பயன்படுத்தி லித்தியம்-6 அணுஉலை திட்டம் குறித்த தகவலை விற்க முயன்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல், மும்பையில் உள்ள ஈரான் தூதரையும், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி போல் நடித்து ஏமாற்றியுள்ளனர். அக்தர் மும்பை போலீசாராலும், அவரது சகோதரர் உசேன் டில்லி போலீசாராலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 10க்கும் மேற்பட்ட வரைபடங்கள், அணு ஆயுத தரவுகள், போலி பாஸ்போர்ட்டுகள், மற்றும் போலி பாபா அணுஆராய்ச்சி மையத்தின் அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

