தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நயினார் நாகேந்திரன் கைது

நயினார் நாகேந்திரன் கைது

நயினார் நாகேந்திரன் கைது


ADDED : நவ 24, 2026 03:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 03:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

மதுரைக்கு கிளம்பிய நயினார் நாகேந்திரனை நெல்லை தாழையூத்தில் தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் கூறியதாவது: காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் இல்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறேன் என்று தான் சொன்னேன். இதனையே காலையில் கூறினேன்

மதுரை கலெக்டர் 144 தடை உத்தரவு போட்டு உள்ளார்.அங்கு தானே தடை உத்தரவு போடப்பட்டது. எங்களுக்கு என்ன தடை உத்தரவு என போலீசிடம் கேட்டேன். இல்லை, கைது செய்கிறோம். விட மாட்டோம் என சொல்கின்றனர்.இது தனி மனித உரிமையை பறிக்கிறது.25வது சட்டப்பிரிவு, தனி மனிதன் யார் வேண்டுமானாலும் விருப்பப்படி வழிபாடு நடத்தலாம். மதவழிபாடு முறையாக செய்யலாம் என சட்டப்பிரிவு 25, 26 சொல்கிறது.

ஆனால் முதல்வர் விஜய் தமிழகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு, கற்பழிப்பு சம்பவங்கள், அவர் கட்சி எம்எல்ஏக்கள் பாலியல்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அதை மறைக்க திசைதிருப்ப இதுபோன்று ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு பாலியல் தொல்லை குறித்த எம்எல்ஏ மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையெல்லாம் மடைமாற்றம் செய்ய முயற்சி நடக்கிறது.

பெரும்பான்மை மக்களின் உரிமை பறிக்கப்படுகிறது. இந்தியாவின் உச்சபட்ச சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி நடக்கிறார்கள் என்று சொன்னால், இவர்களுக்கு என்ன தைரியம் இருக்கிறது என புரியவில்லை. இவர்களுக்கு இறைவன் தான் தீர்ப்பு வழங்க வேண்டும். காவல்துறை தடுத்து நிறுத்தி உள்ளனர்.

ஒன்று போலீசாருடன் சண்டை போட வேண்டும். போட்டால் தொண்டர்கள் பாதிக்கப்படுவார்கள். வேறு வழியில்லை.நாம் போடும் காணிக்கை வைத்து திருப்பரங்குன்றத்தில்தீபம் ஏற்ற முடியாது என்றால் என்ன நியாயம்.முதல்வருக்கு எவ்வளவு தைரியம்.

எவ்வளவு பின்னணி?எந்த தைரியத்தில் முதல்வர் செய்கிறார் என்பது கேள்வி. எந்த மாநிலத்திலும் இப்படி நடக்கவில்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us