இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்தார் நேபாள பிரதமர்
இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்தார் நேபாள பிரதமர்
ADDED : செப் 02, 2026 06:31 PM

காத்மாண்டு: இந்தியா செய்த இந்த உடனடி உதவிகள் நேபாள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என பிரதமர் பாலேந்திர ஷா நன்றி தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 26ம் தேதி ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடும் பாதிப்பை சந்தித்துள்ள நேபாளத்திற்கு, உடனடியாக நம் நாட்டின் சார்பில் அவசர மருத்துவக் குழுக்களும், நிவாரணப் பொருட்களும் அனுப்பப்பட்டன.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் பாலேந்திர ஷா, இந்தியா செய்த இந்த உடனடி உதவிகள் நேபாள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக, அந்நாட்டின் பார்லிமென்டில் கூறியுள்ளார்.
இதற்கிடையே நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1,127 ஆக அதிகரித்துள்ளது. மாயமான 4,858 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேபாளத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அந்நாட்டில் உள்ள சுன்கோஷி, கண்டகி, மகா காளி ஆகிய மூன்று முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
