தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ஐ.நா.,வில் பேஜர் கருவியை காட்டி பயங்கரவாதிகளை எச்சரித்த நெதன்யாகு

ஐ.நா.,வில் பேஜர் கருவியை காட்டி பயங்கரவாதிகளை எச்சரித்த நெதன்யாகு

ஐ.நா.,வில் பேஜர் கருவியை காட்டி பயங்கரவாதிகளை எச்சரித்த நெதன்யாகு


ADDED : செப் 26, 2026 12:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 12:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கையில் ஒரு, 'பேஜர்' கருவியை காட்டி, ''இந்த பேஜர் கருவி நினைவிருக்கிறதா? ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளுக்கு நிச்சயம் நினைவிருக்கும்,'' என, பேஜர் கருவிகள் வெடித்து பயங்கரவாதிகள் உயிரிழந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

மேற்காசிய பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கும், லெபானனை கட்டுப் படுத்தும் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடிக்கிறது.

கடந்த 2024 செப்டம்பரில், லெபனானில் ஹெஸ்பொல்லா அமைப்பினர் தகவல் தொடர்புக்கு பயன்படுத்திய பேஜர் கருவிகள் அடுத்தடுத்து வெடித்ததில் பலர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை இஸ்ரேலின், 'மொசாட்' உளவு அமைப்பு நடத்தியது.

இந்நிலையில், ஐ.நா., சபையில் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ், ஹெஸ்பொல்லா மற்றும் ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளை ஆதரித்து பேசினார். மேலும் துருக்கி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் நியூயார்க் மேயர் சோஹ்ரான் மம்தானி ஆகியோரையும் அவர் விமர்சித்தார்.

அப்போது, பேஜர் கருவியை காட்டி, ''இந்த பேஜர் கருவி ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளுக்கு நிச்சயம் நினைவிருக்கும்,'' என எச்சரிக்கும் வகையில் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசியதாவது: மூன்று ஆண்டுகளில், எங்கள் வீரர்கள் ஏழு முனைகளில் போரிட்டுஉள்ளனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தின் அளவே உள்ள வேறு எந்த நாடாவது, மூன்று ஆண்டுகளாக ஏழு முனைகளில் போரிட முடியுமா? ஈரானின் கொலைகார சர்வாதிகார அரசு, அணு ஆயுதங்கள் உருவாக்குவதை தடுப்பேன் என, உறுதி அளித்திருந்தேன்.

எங்களை உலக வரைபடத்தில் இருந்து அழிக்க ஈரான் திட்டமிட்டது. மாறாக, அமெரிக்காவுடன் இணைந்து அந்நாட்டை கடுமையாக தாக்கினோம். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us