காவல்துறையில் மீடியாக்களை சந்திக்க புதிய பதவி உருவாக்கம்
காவல்துறையில் மீடியாக்களை சந்திக்க புதிய பதவி உருவாக்கம்
ADDED : அக் 31, 2025 09:40 PM

சென்னை : தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் காவல்துறையில் மீடியாக்களை சந்திப்பதற்கு என மீடியா தொடர்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக தமிழக உள்துறைச் செயலர் தீரஜ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
சென்னை குற்ற ஆவண காப்பக அதிகாரியாக இருக்கும் ஜெயஸ்ரீ,ஊர்க்காவல்படை அதிகாரியாகவும்
ஆவடி துணை கமிஷனர் சங்கு, ஆவடி, ரெட்ஹில்ஸ், போக்குவரத்து துணை கமிஷனர் ஆகவும்
தூத்துக்குடியில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர் மகேஸ்வரி, சென்னையில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழக போலீசில் தொழில்நுட்ப சேவைகள் பிரிவு ஐஜி அவினாஸ் குமாரிடம் கூடுதலாக மாநில குற்றப்பிரிவு ஆவண காப்பக ஐஜி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காவல்துறையில் மீடியாக்களை சந்திப்பதற்கு என புதிதாக மீடியா தொடர்பு அதிகாரி மற்றும் செய்தித்தொடர்பாளர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டு அதற்கு ஐபிஎஸ் அதிகாரியான முத்தரசி நியமிக்கப்பட்டுள்ளார்.

