தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தமிழகத்தின் நலனில் சமரசமில்லை: மீண்டும் சொல்கிறார் ஸ்டாலின்

தமிழகத்தின் நலனில் சமரசமில்லை: மீண்டும் சொல்கிறார் ஸ்டாலின்

தமிழகத்தின் நலனில் சமரசமில்லை: மீண்டும் சொல்கிறார் ஸ்டாலின்

6


ADDED : நவ 28, 2026 11:42 AM

Follow on GoogleFavourite on Google

6

ADDED : நவ 28, 2026 11:42 AM


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த எம்பிக்கள் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசியதாவது: உணர்ச்சி வசப்படாமல், தொலைநோக்குப் பார்வையுடன் தொகுதி மறுவரையறை பிரச்னையை நாம அணுகியுள்ளோம். தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்படும் போது திமுக என்ன நிலைப்பாடு எடுக்கும் என்று தான் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுக்க பேசப்பட்டு வந்தது. அதற்கான தெளிவான பதிலை நாம் கொடுத்துள்ளோம். தொகுதி மறுவரையறை என்ற ஒரு ஆபத்து வர உள்ளது; தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையும் என இந்தியாவிலேயே முதன் முதலாக எச்சரிக்கை மணி அடித்தது நாம் தான்.

படித்து பார்க்க கூட உரிய கால அவகாசம் தராமல் அவசரமாக கொண்டு வந்த அந்த மசோதாவை பார்லியில் தோற்கடித்தோம். பாஜகவுக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தோம். தற்போது இருக்கும் தொகுதி எண்ணிக்கையே தொடரலாம் என நாம விரும்பினாலும், தவிர்க்க முடியாத அரசியல் சாசன விதிப்படி தொகுதிகளை அதிகரிக்கும் போது , அதில் தமிழகம் பாதிக்கப்பட கூடாது என 'practical'-ஆன தீர்வை 2024ம் ஆண்டே நாம் சட்டசபை தீர்மானம் மூலமாக முன்வைத்தோம்.

நாம் மட்டும் குரல் எழுப்பாமல் இருந்திருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் வட மாநிலங்களுக்கு மட்டும் தொகுதிகளை அதிகரித்துவிட்டு, நமக்கான பர்செண்டேஜை குறைத்திருப்பார்கள். ஆனால், இன்றைக்கு மசோதாவின் நகல் கிடைத்துவிட்டது. நாம் முன்வைத்த இரண்டு முக்கியமான கோரிக்கைகளுமே இடம்பெற்றுள்ளது. இது நம்முடைய மூன்றாண்டுகால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. நாங்கள் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளிலும் தற்போது வரை உறுதியாக உள்ளோம்.

தமிழகத்தின் நலன் பறிபோக கூடாது, அதில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றுவதில், நம் முயற்சியில் வெற்றி அடைந்துள்ளோம். 1967ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது 42 ஆக இருந்த தமிழகத்தின் லோக்சபா தொகுதிகளை 39 ஆக குறைத்தார்கள். தற்போது நம்முடைய பர்செண்டேஜில் எந்த மாற்றமும் இல்லாமல், நமக்கான தொகுதிகள் உயர்வதை உறுதி செய்துள்ளோம்.

நம்முடைய கடமைய நாம செய்துள்ளோம். இதை எல்லோரிடமும் எடுத்துச் சொல்லுங்கள். பார்லிமென்ட் கூட்ட தொடரில் நம் நிலைப்பாட்டை ஓங்கிச் சொல்லுங்கள். கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாக சொல்வதில் தயக்கம் கூடாது. எப்போது வாள் எடுக்க வேண்டும், எப்போது கேடயம் எடுக்க வேண்டும் என்பதை சரியாகத் தீர்மானிக்க வேண்டும் என கருணாநிதி சொல்லியிருக்கிறார். அதன்படி நடந்துகொள்ளுங்கள். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us